Cinema
அஜித்தின் வேதாளத்தை மிஞ்சிய சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ ? : முதல் நாளிலே ரூ. 33 கோடி வசூல் சாதனை !
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘வேதாளம்’. தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தோடு நேரடியாக களம் கண்ட இந்த படம் உலக அளவில் சுமார் ரூ.115 கோடி வசூல் சாதனை படத்தது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த படம் 'போலோ சங்கர்' என்ற பெயரில் நேற்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடித்துள்ளனர். மேலும் சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
உலக அளவில் வெளியாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த்தாலும், சில விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்து வருகிறது. தற்போது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடைபோடும் இந்த படமானது முதல் நாளிலே உலக அளவில் ரூ.33 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'வேதாளம்' திரைப்படம் தனது முதல் நாளிலே ரூ.15.5 கோடி வசூலித்த நிலையில், தற்போது அதன் ரீ மேக் படமான 'போலோ சங்கர்' திரைப்படம் ரூ.33 கோடி வசூலித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக போலோ சங்கர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இந்த படத்தின் இயக்குநர் மெஹர் ரமேஷ், அஜித் பயன்படுத்திய 'கிரின்ஞ்' டயலாக் இதில் சேர்க்கவில்லை என்று கூறியது அஜித் ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!