Cinema
Don 3 : கதையை முழுமையாக கேட்டுவிட்டு நிராகரித்த ஷாருக்கான்.. Ok சொன்ன ரன்வீர்.. காரணம் என்ன ?
பிரபல பாலிவுட் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2006-ல் வெளியான படம்தான் 'Don'. 1978-ல் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தின் நியூ வெர்ஷனாக அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் Don-2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து இதன் அடுத்தபாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில், சுமார் 12 வருடங்களை தாண்டி டான் 3 படத்தின் அப்டேட் அண்மையில் வெளியானது. ஆனால் இதில் ஷாருக்கானுக்கு பதில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்று டான் 3 படத்தின் டீசர் வெளியானது.
அதில் ரன்வீர் சிங் புதிய டானாக காட்சியளித்தார். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் ஷாருக் ரசிகர்கள் இந்த படத்தில் ஷாருக் இல்லை என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த படத்தை ஷாருக்கானே நிராகரித்ததாக இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஷாரூக்கானிடம் தான் கதையை கூறிய பொழுது, முழு கதையை கேட்ட பின்னர் அவர் ஏற்கனவே டான், டான் 2 ஆகிய படங்களில் நடித்ததால் இதில் தனக்கு ஆர்வமில்லை என்றும், தான் டானாக நடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தாக கூறினார். மேலும் தான் வித்தியாசமான கதையில் நடிக்க விரும்புவதாகவும், 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் வேறு வேறு நடிகர்கள் நடித்தாலும், படம் சிறப்பாக தான் இருக்கும் என்றதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த படத்தின் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கலாம் என்று ஷாருக் கானே கூறியதாக தெரிவித்தார். பலமுறை ஷாருக்கானை இந்த படத்தில் நடிக்க வறுபுறுத்தியபோதும், அவர் இதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டான் படம் 1978-ல் சலிம் - ஜாவத் உருவாக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியானது. தொடர்ந்து இந்த படம் தமிழில் 1980-ல் ரஜினி நடிப்பில் பில்லா படமாக ரீ-மேக் செய்யப்பட்டது. இதையடுத்து ஷாருக் நடிப்பில் டான் என்று அதே பெயரில் 2006-ல் வெளியானது. அதே போல் தமிழில் 2007-ல் அஜித் நடிப்பில் 'பில்லா' என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் 2009-ல் பில்லா என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!