Cinema
மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பாய்ந்து பின்னோக்கி ஓடிய விஜய் தேவரகொண்டா.. காரணம் என்ன ? - VIDEO
பிரபல தென்னிந்திய நடிகரான விஜய் தேவரகொண்டா 2001 ம் ஆண்டு வெளியான 'நுவ்விலா' என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், 'கீதா கோவிந்தம்' படத்தில் ரஷ்மிகா மந்தனாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தார். இதன்மூலம் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமானோர் உருவாகினர்.
தற்போது வரை திரையுலகில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவர்கொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரைக்கொண்டாவும் ஒரு திரை பிரபலம் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் 'பேபி'. சாய் ராஜேஷ் நீளம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், மெளனிகா ரெட்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கு திரைப்படமான இந்த படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தற்போது தெலுங்கில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கிறது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்டுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. வெளியாகி 2 நாட்களிலே சுமார் 17 கோடி வரை வசூலித்துள்ளது. தற்போது வரை ரூ.34 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதன் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழு உட்பட சிறப்பு விருந்தினராக நடிகை விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது மேடையில் அனைவர் முன்பு படம் குறித்து விஜய் தேவரகொண்டா பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கீழே இருந்த ரசிகர் ஒருவர் சட்டென்று மேலே ஓடி வந்து அவரது காலில் விழுந்தார்.
ரசிகர் திடீரென கீழே இருந்து மேலே ஓடி வருவதை கண்ட விஜய் தேவரகொண்டா பயத்தில் அலறி பின்னோக்கி ஓடினார். ரசிகர் மேலே ஓடி சென்றதை கண்ட பாதுகாவலர்கள் உடனே அவரை மேடையில் இருந்து கீழே அழைத்து சென்றனர். விஜய் தேவரகொண்டா பயத்தில் பாய்ந்து பின்னோக்கி ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!