Cinema
லியோ விஜய்.. அஜித்.. ரஜினி 171.. கல்லூரி நிகழ்ச்சியில் UPDATES அள்ளி வீசிய லோகேஷ் கனகராஜ்: ரசிகர்கள் குஷி
கடந்த 2017-ல் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்தான் 'மாநகரம்'. இந்த படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வெளியாகி திரை ரசிகர்களுக்கிடேயே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இது லோகேஷிற்கு ஒரு நல்ல பெயரையும் கொடுத்தது.
அதன்பிறகு இவரது இயக்கத்தில் 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம் பெரும் பெயரை இவருக்கு பெற்று தந்தது. மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்தை அடுத்து, இவரது அடுத்த படமே விஜயுடன் ஒப்பந்தமானது. அதன்படி 2021-ல் மாஸ்டர் படம் வெளியானது. இது லோகேஷிற்கு மட்டுமின்றி ஒரு வில்லனாக விஜய் சேதுபதிக்கும் பெரிய பெயரை பெற்று தந்தது.
தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசையில் ஒலித்த மாஸ்டர் மியூசிக் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலுடன் ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு (2022) வெளியான தமிழ் படங்களில் சிறந்த படமாக திகழ்ந்த விக்ரம் இவரை தற்போது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலுக்கு ஒரு ஹிட் கொடுத்த படம் என்றால் அது 'விக்ரம்' தான். மேலும் இந்த படத்தை பார்க்கும் முன்பு 'கைதி' படத்தை பார்க்க வேண்டும் என்று லோகேஷ் சொன்னது ஆரம்பத்தில் அதிகமானோருக்கு புரியவில்லை என்றாலும், படத்தை பார்த்த பிறகு இரண்டு படங்களுக்கும் உள்ள கனெக்ஷன் தெரியவந்தது.
இதையடுத்தே ஹாலிவுட்டில் மார்வெல் யுனிவர்ஸ் (MCU) என்று சொல்வது போல் கோலிவுட்டில் லோகி யுனிவர்ஸ் (LCU) என்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. விக்ரமை தொடர்ந்து விஜயை வைத்து அவரது 67-வது படமான 'லியோ' படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய், த்ரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என ஒரு திரைபட்டாளமே நடிக்கிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் லோகேஷ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது படங்களின் அப்டேட்டை கூறினார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பேசியதாவது, "நிச்சயமாக வாய்ப்பிருந்தால் அஜித்துடன் படம் பண்ணுவேன். எனது கனவு ப்ராஜெக்ட் என்பது 'இரும்புக்கை மாயாவி'. இந்த கதையை நான் 10 வருடத்துக்கு முன்னரே எழுதினேன். அது தான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட்.
எனக்கு ரோமன்ஸ் படம் எடுக்க வராது என்று நீங்க எப்படி முடிவு பண்ணலாம். லியோ படம் எல்சியூவில் வருகிறதா இல்லையா என்று இன்னும் 3 மாதங்களில் தெரியவரும். நீங்கள் நினைப்பது போல் லியோ படத்தில் த்ரிஷா சாகலாம் மாட்டாங்க. நான் நிறைய நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன்; ஆனால் விஜய் பழகுவதற்கு எளிமையாக இருந்தார். அதனால் தான் அவரை நான் அண்ணா என்று கூப்பிடுகிறேன். .
லியோ படத்தின் இரண்டாவது பாடல் இப்போதைக்கு வராது. பாடல்கள் வெளியாக தாமதமாகும். அடிக்கடி பாடல்களை வெளியிட வழக்கமான படம் கிடையாது. இந்தப் படம் கைதி மாதிரி இருக்கும்" என்றார். தொடர்ந்து ரஜினியை வைத்துப் படம் இயக்கவுள்ளதாகத் வெளியான தகவல் குறித்துக் கேட்டதற்கு, தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!