Cinema
நோலன் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்.. நாளைக்கு தான் Last.. Oppenheimer முன்னிட்டு INOX-ல் ஸ்பெஷல் படங்கள்!
ஹாலிவுட் சினிமாவின் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் வெளியான மெமன்டோ, தி ப்ரஸ்டீஜ், இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லார், டெனட் உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் இவருக்கு ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இவரது படங்களில் அதிகம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறாது. இதை இவர் விரும்ப மாட்டார். முடிந்த அளவுக்கு நிஜமாகக் காட்சிகளை எடுக்க நினைப்பார். இதனாலேயே இவரது படங்கள் பெரிய கவனம் பெறும்.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் தற்போது 'ஓப்பன்ஹெய்மர்' (Oppenheimer) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிலியன் மர்பி, ராபர்ட் டெளினி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. இந்த படம் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரை மையமாக வைத்து படம் இயக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த படத்தில் அணுகுண்டு வெடிக்கும் காட்சி கூட கிராபிக்ஸ் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாக நோலன் தெரிவித்துள்ளது இந்த படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. இந்த படம் வரும் 21ம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களில் சிலவை ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி 2008 -ல் வெளியான The Dark Knight, 2010-ல் வெளியான Inception, 2012-ல் வெளியான The Dark Knight Rises, 2014-ல் வெளியான Interstellar, 2017-ல் வெளியான Dunkirk ஆகிய படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
PVR INOX-ல் மட்டும் திரையிடப்பட்டு வரும் இந்த படங்கள் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மட்டுமே தியேட்டரில் கண்டுகளிக்க முடியும். அதன்படி நாளையுடன் இந்த படத்தை திரையரங்குகளில் கண்டுகளிக்க இறுதி நாள். இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?