Cinema
“சிகரெட் வாங்க காசு இல்ல.. 10-ம் வகுப்புல Fail.. சாகனும் னு தோணுச்சு..” - மனம் திறந்த நடிகர் அப்பாஸ் !
தமிழில் 90ஸ்-களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் நடிகர் அப்பாஸ். 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான 'காதல் தேசம்' படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் பிறந்த இவர் தமிழ் மொழி படங்களில் அறிமுகமாகி படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தார்.
"பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்.." என்ற பாடல், நடிகை சினேகாவுக்கு மட்டுமின்றி அப்பாஸுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். தமிழ் மொழியிலேயே பிரதான படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக 2009-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான 'குரு என் ஆளு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகும் தமிழில் 'ராமானுஜன்' என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் இவர் திரைத்துறையை விட்டு விலகி வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அப்பாஸ் பேட்டி அளித்திருந்தார். அதில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும், தனக்கு பள்ளி பருவத்திலேயே தற்கொலை எண்ணம் வந்ததாகவும் தெரிவித்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் பேசியதாவது, "நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது பொதுத்தேர்வில் Fail ஆனதால், தற்கொலை செய்ய நினைத்தேன். பின்னர் சில வருடங்கள் கழித்து நான் காதலித்து வந்த எனது காதலியும் என்னை விட்டு போனதால் சாலையில் தற்கொலை செய்ய எண்ணினேன். அதன்பிறகு தான் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. படித்தால் தான் சாதிக்க முடியும் என்று இல்லை. யார் யாருக்கு என்ன திறமையோ அதில் அவர்கள் முன்னேறினால் போதும்.
சினிமாவில் நான் நடித்த முதல் படம் வெற்றிப்பெற்றது. அதன்பிறகு நான் நடித்த படங்களில் சிலவை தோல்வியடைந்தன. இதனாலே நான் பொருளாதார ரீதியாக மிகவும் சிரம பட்டேன். வாடகை வீட்டில் இருந்த நான், மாத வாடகை கொடுக்க முடியாமல் தவித்தேன். ஒரு சிகரெட் வாங்க கூட காசு இல்லாமல் பரிதவித்தேன்.
இப்படி சினிமாவில் நான் சந்தித்த தொடர் தோல்விகளால் எனக்கு சினிமா மீது வெறுப்பு வந்தது. இதனாலே நான் வெளிநாடு செல்ல நினைத்து குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்று விட்டேன். ஆனால் வேலை கிடைக்க கடினமாக இருந்ததால், ஆரம்பத்தில் மெக்கானிக் வேலை பார்த்தேன். அதன் பின்னர், வாடகைக்கு டாக்சியும் ஓட்டினேன். தற்போது ஒரு இஞ்சினியராக இருக்கிறேன்.
இதனிடையே நான் இறந்து விட்டதாகவும், எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் சிலர் வதந்திகளை பரப்பினர். எனது சமூக வலைதளங்களில் நான் இப்போதும் ஆக்டிவாக இருக்கிறேன். என்னை இப்போதும் சினிமாவுக்கு வர சொல்லி சிலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்" என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் விபத்து ஒன்றில் சிக்கிய நடிகர் அப்பாஸ், தனது காலில் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார். இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய தகவலை அவரே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?