Cinema
கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : திரைப்படம் மற்றும் குறும்படத்துக்கான அறிவிப்புகள் என்ன ?
திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது கோவாவில் 2023, நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்கிறது.
இந்திய பனோரமா பிரிவின் மூலம் இந்திய மாநில மொழித் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியத் திரைப்பட வாரங்களில் திரையிடப்படுகிறது. இதற்கான திரைப்படத்தை 12 உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழுவும், குறும்படத்தை 6 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவும் தேர்ந்தெடுக்கின்றன.
கடந்த ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் அதிகபட்சமாக 26 திரைப்படங்களும், 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. தேசியத் திரைப்பட விருதுகள் 2023-ன் சிறந்த திரைப்படம், சிறந்த குறும்படம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அனைத்து திரைப்படங்களும் ஆங்கில சப்டைட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் 2022 ஆகஸ்ட் 30 முதல் 2023, ஜூலை 31க்குள் தணிக்கை வாரியத்தின் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2023, ஆகஸ்ட்-10 ஆகும். இதுகுறித்த விவரங்களை https://www.iffigoa.org/ - என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டும் இதே போல் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்களோடு சேர்ந்து ராஜமெளலியின் RRR படமும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !