Cinema
‘மாமன்னன்’ படத்தில் பயன்படுத்திய தேர்தல் பிரச்சார வாகனம் யாருடையது ? - உண்மையை உடைத்த உதயநிதி !
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டீர்கள். நாங்கள் பேசி கொடுத்த விளம்பரத்தை விட பத்திரிக்கையாளர்கள் நீங்கள் கொடுத்த விளம்பரம் தான் படத்திற்கு மிகப்பெரிய வெற்றி. என்னுடைய முதல் படமும் மற்றும் கடைசி படமும் வெற்றிப்படமாக அமைந்தது எனக்கு நல்லது. ஒரு விழாவாக என்னை வழி அனுப்பி வைத்து இருக்கிறீர்கள்.
இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கண்டிப்பாக படத்தின் 50 வது நாள் விழா மேடையில் சந்திப்போம். இந்த படத்தின் போஸ்டர் வெளியிட்ட அன்றே, படத்தின் படபிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ஓடிடி தளத்தில் படத்தை விற்றுவிட்டோம். இந்த படத்தில் உபயோகித்த அனைத்து பொருட்களும் உண்மையானவை.
முதலமைச்சர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற பயம் எனக்கு இருந்தது. நடிகர் லால் தான் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றவுடன் தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் முதலமைச்சர் உபயோகித்த பிரச்சார வாகனம் எனது அப்பா மு.க.ஸ்டாலின் உபயோகித்த வாகனம். எதிர்க்கட்சி தலைவர் உபயோகித்த வாகனம் நான் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம்.
'மாமன்னன்' திரைப்படம் வெளியான 9 நாட்களில் மொத்தம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் உலகம் முழுவதும் என இதுவரை 52 கோடி வசூலித்துள்ளது. என்னுடைய படங்களில் இந்த படம் தான் அதிகப்படியான வசூலித்த படம். தெலுங்கில் வரும் 14-ம் தேதி படம் வெளியாக உள்ளது." என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்