Cinema
நாளை ஒரே நாளில் வெளியாகும் 5 திரைப்படங்கள்.. OTTயில் வெளியாகும் படங்கள் என்ன?: முழு பட்டியல் இதோ!
பம்பர், இன்பினிட்டி, ராயர் பரம்பரை, காடப்புறா, வில்வித்தை ஆகிய 5 தமிழ் படங்கள் நாளை வெளியாகிறது.
பம்பர்
இயக்குநர் முத்தையாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய செல்வகுமார் 'பம்பர்' படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
வில்வித்தை
படித்தவுடன் கிழித்து விடவும், கள்தா, தெருநாய்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி உத்ரா வில்வித்தை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் அறிமுக நடிகராக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆராத்யா நடித்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இன்பினிட்டி
சாய் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகும் இன்பினிட்டி க்ரைம் த்ரில்லர் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது.
ராயர் பரம்பரை
ராம்நாத் இயக்கத்தில் நாளை வெளியாகும் ராயர் பரம்பரை படத்தில் கிருஷ்ணா, சரண்யா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கஸ்தூரி, மறைந்த நடிகர் மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
காடப்புறா கலைக்குழு
காடப்புறா கலைக்குழு படத்தை ராஜா குருசாமி இயக்கியுள்ளார். இதில் முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.
OTTயில் வெளியாகும் படங்கள்:-
ஃபர்ஹானா
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'ஃபர்ஹானா' திரைப்படம் Sony Liv தளத்தில் நாளை வெளியாகிறது.
காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
ஆர்யாவின் 34-வது படமாக காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்பட Zee5 தளத்தில் வெளியாகிறது.
டக்கர்
சித்தார்த் நடிப்பில் வெளியான 'டக்கர்' படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
ஸ்வீட் காரம் காபி
மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள ஸ்வீட் காரம் காபி என்ற தமிழ் இணையதொடர் இன்று Amazon Prime தளத்தில் வெளியாகி உள்ளது.
போர் தொழில்
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் நாளை Sony Liv தளத்தில் நாளை வெளியாகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!