Cinema
தியேட்டருக்கு பெண் வேடமிட்டு சென்ற பிரபல இயக்குநர்.. பூரிப்பில் ரசிகர்கள்.. எதற்காக தெரியுமா ?
பொதுவாக திரைப்படத்தில் தான் ஆண்களுக்கு பெண் வேடமிட்டு கட்டப்படுவது உண்டு. ஆனால் நிஜத்தில் எந்த திரைபிரபங்களும் பெண் வேடமிட்டு எங்கும் செல்வதில்லை, செல்ல விருப்படுவதும் இல்லை. இந்த சூழலில் தான் இயக்கிய படத்தை காண பிரபல மலையாள இயக்குநர் ராஜசேனன் பெண் வேடமிட்டு தியேட்டருக்கு சென்றுள்ளது அனைவர் மத்தியிலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1984-ல் 'Aagraham' என்ற மலையாள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜசேனன். தொடர்ந்து ஜெயராம், பிருத்விராஜ், பிஜு மேனன், மஞ்சு வாரியர் என முக்கிய நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ஜெயராமை வைத்து மட்டுமே 15 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். சுமார் 3-க்கு மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் நடிக்கவும் செய்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான Oru Small Family, Sree Ayyappanum Vavarum என சுமார் 9 படங்களில் நடித்த இவர், 6 தொலைக்காட்சி தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் இவரது இயக்கத்தில் Njaanum Pinnoru Njaanum என்ற படத்தை இயக்கியுள்ளார். சுதீர் கரமனா, இந்திரன்ஸ், ஜாய் மேத்யூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தில் ராஜசேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஜூன் 30-ம் திரையரங்குகளில் வெளியாகி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த படத்தின் இயக்குநர் முதல் ஷோவின் போது திரையரங்குக்கு வித்தியாசமான கெட்டப்பில் சென்று ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதாவது இயக்குநர் ராஜசேனன், தனது படத்தின் முதல் காட்சிக்கு பெண் வேடமிட்டு சென்றுள்ளார்.
சிவப்பு நிற சேலை அணிந்து, வளையில், கம்மல், பொட்டு என பார்க்க ஒரு பெண் போலயே காட்சியளித்த அவரை ரசிகர்கள் ஆரவரத்துடன் பார்த்து வரவேற்றனர். முதலில் பெண் என்ற நினைத்த ரசிகர்கள் பின்னர் இயக்குநரை அடையாளம் கண்டு அவருடன் பேசி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜசேனன்.
Njaanum Pinnoru Njaanum படத்தில் பெண் பிள்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருப்பதால், இயக்குநர் பெண் வேடமிட்டு வந்ததாக கூறபடுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!