Cinema
மன உளைச்சல்.. புற்றுநோய் என்ற வதந்தி.. - பிரபல கொரியன் பாடகர் எடுத்த விபரீத முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
கொரியாவில் பிரபல பாடகராக அறியப்படுபவர் தான் சோய் சங்-பாங். 33 வயதான இவர், யூடியூப்பில் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளர். தெற்கு சியோலில் உள்ள பகுதியை சேர்ந்தவர் இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவருக்கு அநேக வாய்ப்புகள் கிடைக்கவே, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். பின்னர் கொரிய லேபிள் பாங்பாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாடி வந்தார். இப்படி தொடர்ந்து பல்லாயிர ரசிகர்களை கொண்ட இவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்காக பணம் தேவை படுவதாகவும் கடந்த 2021-ம் ஆண்டு செய்திகள் வெளியானது.
இதனால் ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும் இந்த செய்தி போலியானது என்று அதிகாரபூர்வ தகவலும் வெளியானது. இதனால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது என சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அடிக்கடி பாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்றைய முன்தினம்) தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்த்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது இவர் தனது youtube பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாக அந்நாட்டு ஊடக செய்திகள் கூறுகிறது.
மேலும் அவர் அந்த குறிப்பில், "என் முட்டாள்தனமான தவறால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இவரது தற்கொலைக்கான சரியின் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!