Cinema
90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான தமிழ் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள் !
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த ஒரு வில்லன் நடிகர்தான் கசான் கான். தமிழில் கடந்த 1992-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான 'செந்தமிழ் பாட்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடித்து வந்த இவர், மலையாளத்திலும் வாய்ப்பு கிடைக்கேவே அதிலும் நடித்து வந்தார். பிறப்பால் மலையாளியான இவர், பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களான பிரபு, விஜயகாந்த், விஜய், கார்த்தி, மோகன்லால், சுரேஷ் கோபி, மம்முட்டி உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். விஜயகாந்துடன் நடித்த நரசிம்மா படம் இவருக்கு தற்போதும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான தமிழ் படமானது 2007-ல் பிரசன்னா வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'சீனா தான 001'. முழுக்க முழுக்க காமெடி திரைப்படமான இந்த படத்தில் இவர் தீவிரவாதியாக நடித்திருப்பார். அதன்பிறகு மலையாள திரையுலகில் மட்டுமே இருந்த இவர், 2015-ல் இறுதியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 90ஸ் களில் குறிப்பிட்ட சில முக்கிய வில்லன்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!