Cinema
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் உண்மையில் நடந்தது திருட்டா ? - பொய் புகார் என சந்தேகிக்கும் போலிஸ் !
சென்னையை சேர்ந்த பிரபல பாடகர்களில் ஒருவர்தான் விஜய் யேசுதாஸ். இவர், பிரபல பாடகர் KJ யேசுதாஸின் மகன் ஆவார். மலையாளத்தில் அறிமுகமான விஜய் யேசுதாஸ், 2002-ல் விஜய், சூர்யா, தேவயானி நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' படத்தில் இடம்பெற்ற "ருக்கு ருக்கு.." பாடலை பாடினார். ஜெயம் படத்தில் "கோடி கோடி மின்னல்கள்..", சண்டைக்கோழி படத்தில் "தாவணி போட்ட தீபாவளி.." என அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் 2015-ல் வெளியான 'மாரி' படத்தில் அருண் குமார் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
நடிப்பில் ஆர்வம் வந்தாலும், தனது இசை பயணத்தை விடாமல் கெட்டியாக பிடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களின் நடித்து வருவதோடு, பாடலும் பாடி வருகிறார். இவர் பாடிய சில பாடலுக்காக மாநில விருதுகள், கேரள மாநில விருதுகள், சைமா என பலவற்றை வாங்கியுள்ளார்.
இந்த சூழலில் சென்னை அபிராமிபுரம் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா, வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் உள்ள பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
அதன்படி வீட்டில் பணி செய்த 11 ஊழியர்கள் என அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்தது. பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை போலீசார் தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் விசாரணைக்கு தற்போது வரை ஆஜராகவில்லை. மேலும், புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனாவும் காவல் நிலையத்தில் போலீசாரின் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் திருடு போனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததும், அவை உடைக்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் காணாமல் போனதாக தக்ஷனா கூறியது பிப்ரவரி மாதம் 18ம் தேதி; . ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மார்ச் மாதம் 30 ஆம் தேதி. அப்போது புகார் அளிக்காமல், 40 நாட்கள் கழித்து ஏன் புகார் அளிக்கப்பட வேண்டும்? என காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து போலீசார் விளக்கம் கேட்டபோது, விஜய் ஏசுதாஸின் குடும்பத்தாரிடம் சரியான முறையில் பதில் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நகைகள் திருடு போனதாக பொய் புகார் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு