Cinema

Thor, RRR.. ஹாலிவுட் To இந்திய சினிமா.. பிரபல நடிகர் திடீர் மறைவு.. காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள் !

பிரபல இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய பெயர் பெற்ற படம்தான் RRR. இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் தான் ரே ஸ்டீவ்சன் (Ray Stevenson). அந்த படத்தில் ஆங்கிலேய ஆட்சியில் கவர்னராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான இவர், 1998-ல் வெளியான The Theory of Flight என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கிங் ஆர்தர்' என்ற வரலாற்று மிக்க ஒரு படத்தில் போர் வீரனாக நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்து பிரபலமான இவர், The Three Musketeers என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து மார்வெல் படமான 'Thor' என்ற படத்தில் தாருக்கு நண்பராக, ஆஸ்கார்ட் வீரனாக நடித்தார்.

Thor

Thor படத்தின் மூன்று பாகங்களிலும் இவர் நடித்துள்ளார். அதன்பிறகும் பல படங்களில் நடித்த இவர், முதல் இந்திய படமாக RRR படத்தில் நடித்தார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் உலக அளவில் மேலும் பெயரை பெற்றார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல சீரிஸ்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக Rome, Vikings, Star Wars உள்ளிட்ட பல முக்கிய சீரிஸ்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

தற்போது 1242: Gateway to the West, Cassino in Ischia, ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்தார். கடந்த 21-ம் தேதி உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். இவருக்கு Hemorrhagic stroke என்று சொல்லப்படும் ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இன்னும் 2 நாட்களில் இவரது 59-வது பிறந்தநாள் வரவுள்ள நிலையில், பிறந்தநாளுக்கு 4 நாட்களுக்கு முன்னர் ரே ஸ்டீவ்சன் உயிரிழந்துள்ளது ரசிகர்கள், திரைபிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு RRR படக்குழு உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: BLOOD and BATTLE : “வரலாற்று படமாக இருக்கும்..” STR 48 குறித்து மாஸ் Update வெளியிட்ட படக்குழு !