Cinema
BLOOD and BATTLE : “வரலாற்று படமாக இருக்கும்..” STR 48 குறித்து மாஸ் Update வெளியிட்ட படக்குழு !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் அறிமுகமான இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் இளைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, பாடகராக, பாடலாசியராக, தயாரிப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'பத்து தல' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது STR 48 படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த படத்துக்கு தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இந்த படாதற்கு என நடிகர் சிம்பு தனது HAIR STYLEஐ மாற்றிக்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மார்ச் மாதமே வெளியான நிலையில், தற்போது வரை இதன் படப்பிடிப்பு தொடங்கிவில்லை. இருப்பினும் இந்த படத்துக்காக நடிகர் சிம்பு, பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக சென்று, பின்னர் லண்டன் சென்று அங்கும் சில பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில் இந்த படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் பேசியதாவது, “சிலம்பரசனுடன் நான் இணையும் இந்த திரைப்படம் ஒரு வரலாறு சம்பந்தமான படம். இந்தப்படம் ஒரு ஆக்சன் எண்டர்டெயினர் ஜானராக இருக்கும். படத்தில் நிறைய மாஸான தருணங்கள் இருக்கின்றன. இந்தப்படம் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்னதான பணிகளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது.
பணிகள் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்குநர்கள் மட்டும்தான் சிலம்பரசனின் திறமையை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சிலம்பரசனின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப்படம் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக கமிட் செய்யப்படவிடவில்லை.” என்று கூறினார்.
தற்போது ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று கமல்ஹாசன், சிம்பு, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!