Cinema
அப்போ ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, இப்போ ‘கேரளா ஸ்டோரி’ இதுக்கு அப்புறம் ‘பெங்கால் ஃபைல்ஸா’ ? - ஆவேசமான மம்தா !
பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘தி கேரளா ஸ்டோரி’. மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென், இந்த படத்தின் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'தி கேரள ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. வெளியான போதே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகின்றனர். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கின்றனர்.
அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்றமுடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.
மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் அமைப்புகள் ஆங்கங்கே போராட்டம் நடத்தியதோடு, இந்த படத்துக்கு கேரள முதலமைச்சர் கண்டனமும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியான இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்த படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்ககங்கள் அறிவித்தது.
தற்போது தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடப்படாத சூழலில், மேற்கு வங்கத்திலும் இந்த படத்துக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளருக்கு நேற்று உத்தரவிட்டிருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, ``வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
முதலில் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துடன் வந்தார்கள். இப்போது 'தி கேரளா ஸ்டோரி', அடுத்து 'பெங்கால் ஃபைல்ஸ்'-க்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக ஏன் இப்படி வகுப்புவாத பிரச்னையை உருவாக்க முயல்கிறது. திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளுடன் கேரளாவை அவதூறு செய்யும் முயற்சிதான் 'தி கேரளா ஸ்டோரி'. 'தி கேரளா ஸ்டோரி' என்பது ஒரு திரிக்கப்பட்ட கதை" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!