Cinema
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” - உழைப்பாளர் தினத்தில் வெளியானது உதயநிதியின் ‘மாமன்னன்’ First Look !
தமிழில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கடந்த 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தனது முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2021- ல் கர்ணன் படத்தை இயக்கினார். கண்டா வரச்சொல்லுங்க.. வுட்றாதீங்க எம்மோ.. ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, இந்த படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், 3-வதாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷனில் இருக்கும் இந்த படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இதன் முதல் பார்வை (First Look) உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று மே 1-ம் தேதியான இன்று இதன் முதல் பார்வை போஸ்ட்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இரண்டு போஸ்டர்களில் முதல் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் வடிவேலுவும், வாளுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு அரியணையில் அமர்ந்திருக்கும் வகையில் உள்ளது.
மற்றொரு போஸ்டரில் கேடயம், ஈட்டி, குதிரை என உருவங்களுடன் உதயநிதி நடுவிலும், மற்ற இரண்டு பக்கங்களில் ஒரு பக்கம் வடிவேலு, மறுபக்கம் பகத் பாசிலும் உள்ளனர். இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சர் பதவியை ஏற்கும் முன்னரே நடிப்பதில் இருந்து விடுபடுவதாக அறிவித்தார். மேலும் இறுதியாக மாமன்னன் படத்தை மட்டும் நடித்து கொடுப்பதாக கூறி, மாமன்னன் படத்தில் மட்டும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இணையவிருந்த படத்தில் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் வெளியேறினார்.
அதன்படி உதயநிதி ஸ்டாலினின் இறுதி படம் 'மாமன்னன்' தான். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், விரைவில் வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், தனது திரையுலக பயணத்தில் மைல் கல்லாக 'மாமன்னன்' படம் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!