Cinema
உழைப்பாளர் தினத்தன்று வெளியாகும் உதயநிதியின் ‘மாமன்னன்’ First Look.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு !
தமிழில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கடந்த 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தனது முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2021- ல் கர்ணன் படத்தை இயக்கினார். கண்டா வரச்சொல்லுங்க.. வுட்றாதீங்க எம்மோ.. ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, இந்த படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், 3-வதாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷனில் இருக்கும் இந்த படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இதன் முதல் பார்வை (First Look) உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சர் பதவியை ஏற்கும் முன்னரே நடிப்பதில் இருந்து விடுபடுவதாக அறிவித்தார். மேலும் இறுதியாக மாமன்னன் படத்தை மட்டும் நடித்து கொடுப்பதாக கூறி, இந்த படத்தில் மட்டும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இணையவிருந்த படத்தில் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் வெளியேறினார்.
தற்போது அமைச்சராக பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் இறுதி படம் 'மாமன்னன்' தான். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், விரைவில் வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், தனது திரையுலக பயணத்தில் மைல் கல்லாக 'மாமன்னன்' படம் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!