Cinema
“எங்களை குறைச்சு மதிப்பிடாதீங்க.. நாங்க 5 பேரும் சினிமாவை விட்டு போகவே மாட்டோம்..” - நடிகர் சல்மான் கான்!
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சல்மான் கான். 1988-ல் வெளியான 'Biwi Ho To Aisi' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தற்போது பாலிவுட்டின் டாப் 5-ல் இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி, எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ரஜினி, கமல் எப்படியோ அதே போல், பாலிவுட்டில் இவரும் ஒருவர். இவரது படம் திரையில் வெளி வந்தாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர். இந்தி மட்டுமின்றி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் கூட ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான 'பதான்' படத்தில் இறுதியாக சிறப்பு காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு Surprise கொடுத்தார். அதில் 'டைகர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் வெளியான படங்களில் மாஸ் ஹிட் கொடுத்த படம் பதான். இதற்கு சல்மான் கானும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார். அப்போது இவர் திரைத்துறையை பற்றியும், வளர்ந்து வரும் நடிகர்கள் பற்றியும் பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஓடிடி தளங்களில் தற்போது ஆபாசம், கவர்ச்சி, கேட்க முடியாத வசனங்கள் அதிகமாக உள்ளன. பேச தகாத வசனங்கள் அதிகமாக உள்ளன. செல்போன்களிலும் அவை கிடைக்கின்றன. இதனால் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அவற்றை பார்த்து பாதிக்கப்படுகிறார்கள்;இது சரியல்ல. எனவே ஓடிடி தலங்களுக்கும் தணிக்கை அவசியம் வேண்டும்.'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாலிவுட் சினிமா துறையில் தற்போதுள்ள இளம் நடிகர்கள் பலரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள்; கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு என்று தனி பெயரும் உள்ளது. ஆனால் அதற்காக மூத்த நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்
இப்போதுள்ள இளம் நடிகர்களுக்கு நாங்கள் தொடர்ந்து சவாலாகவே இருப்போம். பாலிவுட்டின் மூத்த நடிகர்களான ஷாருக்கான், அஜய்தேவ்கான், அமீர்கான், அக்ஷய் குமார், நான் என நாங்கள் யாரும் அவ்வளவு எளிதாக இந்த சினிமா துறையை விட்டு விலகி விட மாட்டோம்." என்றார்.
சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'kisi ka bhai kisi ki jaan' என்ற படம் வரும் 21-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. தற்போது இவர் 'Tiger 3' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் 2 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!