Cinema

“இது சட்டப்பூர்வமானதா? அதுக்கு மூச்சுத் திணறும்..” -பிரபல Star ஹோட்டல் குறித்து நடிகை ஸ்ரேயா பரபர புகார்!

இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் ஸ்ரேயா சரண். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 2001-ல் அறிமுகமானார். அதன்பிறகு 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் ஹீரோவுக்கு தோழியாக அறிமுகமான இவர், 2005-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், ஸ்ரேயாவுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும் தமிழில் முக்கிய பிரபலங்களுடன் நடித்துள்ளார். விக்ரமுடன் கந்தசாமி, ரஜினியுடன் சிவாஜி, விஷாலுடன் தோரணை, தனுஷுடன் குட்டி, சிம்புவின் AAA உள்ளிட்ட அதிக படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி அண்மையில் குழந்தை பிறந்தது. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், அண்மையில் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் படத்தையும் பகிர்ந்திருந்தார். அது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் ஸ்ரேயா மகாராஷ்டிராவில் உள்ள நட்சித்திர ஹோட்டல் ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அதில் பறவைகள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நீங்கள் பறவைகள் ஆர்வலராக இருந்தால் அவற்றை இப்படி சிறைப்பிடித்து வைக்கக்கூடாது. பறவைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகளா? இப்படி பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா?

நட்சத்திர ஓட்டலிலோ, வீடுகளிலோ பிராணிகளை கூண்டில் அடைத்து பொறுப்பற்ற முறையில் வளர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டால் அவற்றை மூச்சுத்திணறும் கூண்டில் அடைக்காமல் அவற்றுக்கு தனி இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரேயா நடிப்பில் அண்மையில் 'கப்ஜா' என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது 'மியூசிக் ஸ்கூல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆபாச நடிகையோடு தொடர்பு விவகாரம் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நீதிமன்றத்தில் வைத்து அதிரடி கைது !