Cinema
சிம்பு குறித்த ஒரே கேள்வி.. ஆவேசப்பட்டு கடலில் குதித்த கூல் சுரேஷ்.. பதறிப்போன நெறியாளர்.. என்ன நடந்தது ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் அறிமுகமான இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் இளைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, பாடகராக, பாடலாசியராக, தயாரிப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
இவர் திரையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது பேச்சை கேட்க தனி கூட்டமே உள்ளது. இதனாலே இவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் முன்னணி நடிகராகவே கருதப்பட்டார். தான் இருப்பது தனது ரசிகர்களுக்காக என்றும், ரசிகர்கள்தான் தனக்கு எல்லாமே என்றும் சிம்பு பல மேடைகளில் கூறிக்கொண்டார்.
இவருக்கு வெளியில் ரசிகர்கள் ஏராளம் இருக்க, திரைத்துறைக்குள்ளே இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் முக்கியமான நபர்தான் கூல் சுரேஷ். பிரசாந்த் நடிப்பில் வெளியான சாக்லேட் படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
குறிப்பாக சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான 'காதல் அழிவதில்லை' படத்தின் சிம்புவுக்கு நண்பராக நடித்தார். அதன்பிறகு அலை உள்ளிட்ட சில படங்களில் சிம்புவுடன் சேர்ந்து படங்களில் அவருக்கு நண்பராக துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியே தொடர்ந்து சிம்புவின் ரசிகராக மாறிய இவருக்கு மற்ற திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு சில காலங்கள் திரையில் தோன்றாத இவர், கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' மூலம் மீண்டும் பிரபலமானார். அந்த படத்தில் நடிக்காதபோதும், அந்த படத்துக்காக இவர் அதிக ப்ரோமோஷன்களை இலவசமாகவே செய்தார். குறிப்பாக 'வெந்து தணிந்தது காடு.. இவருக்கு வணக்கத்தை போடு" என்ற ரைமிங் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த டயலாக்கை கூல் சுரேஷ் எங்கு சென்றாலும் சொல்லி வந்தார். இதன் மூலம் மீண்டும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனது அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். சிம்புவின் வெறித்தனமான ரசிகரான இவருக்கு சிம்புவால் தான் பட வாய்ப்புகளும் போனது என்று பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கடலுக்குள் போட்டில் வைத்து பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் உணர்ச்சிவச பட்ட கூல் சுரேஷ் திடீரென கடலுக்குள் குதித்து விட்டார். இதனால் பேட்டி பாதியிலே நின்றுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடலுக்குள் படகில் வைத்து எடுக்கப்பட்ட பேட்டியில் நெறியாளர் சிம்பு குறித்து நெறியாளர் பல கேள்விகள் கேட்டார். அப்போது சிம்பு வைத்து ஆதாயம் தேடுகிறீர்களா ? அவரால் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பல கேள்விகளை கேட்டார். அதற்கு தான் சிம்புவின் ரசிகர் என்றும், சிம்பு நேரடியாக உதவி செய்யாவிட்டாலும் கூட, மறைமுகமாக அவரால்தான் எனது குழந்தைகள் இன்று பள்ளியில் படித்து வருகிறது என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூல் சுரேஷ், பத்து தல படத்தை பார்க்க FDFS-க்கு HELICOPTER-ல வரப்போவதாக தெரிவித்தார். தொடர்ந்து பல கேள்விகளை கேட்ட நெறியாளர் இது குறித்து கேட்டார். அப்போது இதற்காக 5 அரை லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் வரவழைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூல் சுரேஷ் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து சிம்புவிடம் ஏதேனும் பட வாய்ப்புகள் எதிர்பார்க்கிறீர்களா என்றும், நீங்கள் செய்வதெல்லாம் சிம்பு கேட்க மாட்டாரா என்றும் நெறியாளர் கேள்வி கேட்கவே எமோஷனல் ஆன கூல் சுரேஷ், தனது மைக்கை கழட்டி விட்டு கடலுக்குள் குதித்து விட்டார். இதனால் பதறிப்போன நெறியாளர் மற்றும் படகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
படகில் இருந்த நீச்சல் தெரிந்த நபர் ஒருவர் அவரை கடலில் குதித்து காப்பாற்றி மீண்டும் படகிற்கு கொண்டு வந்தார். இதையடுத்து பேட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தான் செய்தது தவறு என்றும், இதுபோல் யாரும் செய்யவேண்டாம் என்றும் அவர் இறுதியாக பேசினார். அவர் கடலில் குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்டனங்களையும் எழுப்பி வருகிறது.
கூல் சுரேஷ் செய்த இந்த சம்பவத்தை பலரும் நடிப்பு என்றும், முன்னதாக ஏற்பாடு செய்து அவர் கடலில் குதித்தார் என்றும் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். முன்னதாக அந்த பேட்டி தொடங்கும்போதே தனக்கு நீச்சல் தெரியாது என்று கூல் சுரேஷ் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !