Cinema
மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது அஜித்தின் முதல் படம் ? - பிறந்தநாளுக்கு மாஸ் ட்ரீட்.. தகவலால் ரசிகர்கள் குஷி !
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் சில தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் அதனை வசூல் ரீதியாக வெற்றியடைய செய்து விடுவர். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பைக் ரேஸிலும் கில்லாடி. இதனாலே அவர் அடிக்கடி பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வார்.
'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், அதன்பின் 1993-ல் வெளியான 'அமராவதி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படம் இதுவாகும். அதன்பிறகு பல படங்களில் நடித்து தற்போது தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித்.
எந்த படம் வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடையும் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது உள்ளது. இவர் தனது பிறந்தநாளை ஆண்டுதோறும் மே 1-ம் தேதி கொண்டாடுவார். அதற்காக இவரது ரசிகர்கள் இரத்த தான முகாம், பட்டாசு வெடி என்ற அவரது பிறந்தநாளை ஒரு பண்டிகை போல் கொண்டாடி மகிழ்வர்.
அந்த வகையில் இந்தாண்டும் நடிகர் அஜித் தனது 52-வது பிறந்தநாளை வரும் மே 1-ம் தேதி கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக ஆனந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் அவரது முதல்பட தயாரிப்பாளர் பொன்னுரங்கம். அதன்படி அவரது முதல் படமான 'அமராவதி' தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தை செல்வா இயக்கியுள்ளார். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். கவிதா, நாசர், சார்லி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படமானது 1933, ஜூன் 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றிருந்தாலும், தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் பொன்னுரங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!