Cinema
“தனுஷ்கிட்ட இந்த படம் மாதிரி ஒரு கதை சொல்லிருக்கேன்” -அடுத்த படம் குறித்து மாஸ் Update வெளியிட்ட H வினோத்
தமிழில் தற்போது பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எச்.வினோத். ஆரம்பத்தில் இயக்குநர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2014-ல் நடராஜன் நடிப்பில் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதோடு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெற்றது. இவரது முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு 2017-ல் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கி மேலும் வரவேற்பை பெற்றார். கார்த்தி நடிப்பில் வெளியான இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.
இன்றளவும் அனைவரும் பிடித்த படமாக இருக்கும் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, அஜித்துடன் கூட்டணி வைத்தார். இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீ-மேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். அதன்பிறகும் அஜித்துடன் வலிமை, அண்மையில் வெளியான துணிவு ஆகிய படங்களை இயக்கினார்.
இவையனைத்தும் கலவையான விமரசனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையே பெற்றது. துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச்.வினோத் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியானது. அதன்படி அவர் கமல்ஹாசன், தனுஷ், விஜய் சேதுபதி யாரையாவது வைத்து இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், தற்போது எச்.வினோத் புதிய சுவாரஸ்ய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற எச்.வினோத்திடம் சதுரங்க வேட்டை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "‘சதுரங்க வேட்டை’ மாதிரி ஒரு கதையை தனுஷிற்காக உருவாக்கி உள்ளேன். அதை அவரிடமும் சொல்லியுள்ளேன். அந்த கதையும் அவருக்கு பிடித்தது." என்றார்.
இதன்மூலம் எச்.வினோத், தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் அண்மையில் வெளியானது. இதையடுத்து தற்போது 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷின் சாணி காயிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!