Cinema

7 ஆஸ்கர் விருதை வென்ற ’Everything All At Once' படம்.. 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இந்தியா.. முழு விவரம் !

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2023 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ’Everything All At Once' திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது. அதேபோல இரண்டு இந்திய படங்களுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள் :

  • சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ’Everything All At Once' படம் தட்டி சென்றது. அந்த படத்தில் நடித்த மிச்சேல் யோவுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

  • ’Everything All At Once' படத்துக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதும், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதும், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

  • ’Everything All At Once' படத்தில் நடித்த கி.ஹு.ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி.லீ.கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.

  • சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'The Whale' படத்திற்காக பிரெண்டன் ஃப்ரேசர் வென்றார்.

  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை கில்லர்மோ டெல் டோரோவின் 'பினோக்கியோ’திரைப்படம் தட்டிச் சென்றது.

  • சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை ‘The Whale' படம் வென்றது.

  • சிறந்த ஒளிப்பதிவுக்கான வென்றது' All Quiet on the Western Front' படம் வென்றது.

  • சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த "ALL QUIET ON THE WESTER FRONT".

  • சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல்.

  • சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை 'All Quiet on the Western Front' வென்றது.

  • "BLACK PANTHER: WAKANDA FOREVER" திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ரூத் கார்டர்.

  • சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை 'Navalny' படம் தட்டிச்சென்றது.

  • சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers'.

  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “An Irish Goodbye” வென்றது

  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது 'Women Talking' படத்துக்கு கிடைத்துள்ளது.

  • சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது 'அவதார்: வே ஆஃப்ப் வாட்டர்' படத்திற்கு கிடைத்துள்ளது.

  • சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருது 'All Quiet on the Western Front' படத்துக்கு கிடைத்துள்ளது.

  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை 'All Quiet on the Western Front' படம் வென்றுள்ளது.

Also Read: ஆஸ்கர் விருதை வென்றது ’நாட்டு நாட்டு’ பாடல் -ஏ.ஆர்.ரகுமானுக்கு பின்னர் ஆஸ்கர் விருதை வென்றார் கீரவாணி !