Cinema
பிரிட்ஜுக்குள் இருந்த 2 கால்கள்.. தலை, உடல் எங்கே? - கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரபல மாடல் அழகி: பின்னணி?
சீனாவில் உள்ள ஹாங்காங்கில் வசிப்பவர் அபி சோய். 28 வயதுடைய இவர் அங்கு பிரபல மாடல் அழகியாக இருக்கிறார். உலக அளவில் புகழ் பெற்ற இவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதோடு இவரது புகைப்படம் 'எல்அபிசியல் மொனாக்கோ' என்ற பேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
அந்த பகுதியில் பிரபல மாடலாக இருந்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவருக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனியே வசித்து வருகிறார். இப்படி இருக்கையில், இவர் கடந்த 2-3 நாட்களாக காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, தாய் போ என்ற பகுதியில் உள்ள கசாப்பு பிரிவில் மர்ம நபரின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டது. அதோடு அந்த உடலில் உள்ள 2 கால்களும் அங்கிருந்த பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாரிக்கையில், அது காணாமல் போன அபி சொய் என்று தெரியவந்தது.
இதையடுத்து காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அபி சொய்யை கொலை செய்தது அவரது முன்னாள் கணவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த அபியின் முன்னாள் கணவரை 100 பேர் கொண்ட தனிப்படை அமைத்ததோடு, மோப்ப நாய்கள் உதவியோடு அவரை கைது அதிகாரிகள் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இந்த கொலையில் அவரது 65 வயதுடைய தந்தை, 63 வயதுடைய தாய், மற்றும் சகோதரர் ஆகிரியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொத்துக்காகதான் தனது முன்னாள் மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
அதாவது சொய், தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சுமார் பத்து மில்லியன் ஹாங்காங் டாலர்கள் தொடர்பாக தகராறுகளை கொண்டிருந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பெர்ம் மோதலால் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை முன்னாள் கணவரின் குடும்பத்தார் கொலை செய்தனர்.
தற்போது அபி சொய்யின் மீதமிருக்கும் தலை உட்பட மற்ற உடல் பாகங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அபியின் முன்னாள் கணவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலனே இதே போன்று கொலை செய்து பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!