Cinema
“நான் செத்துடுவேனோனு ரொம்ப பயந்தேன்.. இன்னும் போராடிட்டுதான் இருக்கேன்..” - ENEMY பட நடிகை உருக்கம் !
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'மயோக்கம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். இதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'சிவப்பதிகாரம்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் மாதவனுடன் 'குரு என் ஆளு', அருண் விஜயுடன் 'தடையற தாக்க', ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் முழுக்க முழுக்க மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த இவர், 2021-ம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான 'எனிமி' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் இம்முறை விஷாலுக்கு எதிரியாக நடித்திருந்தார்.
தற்போதும் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை எடுத்து வந்ததால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். பின்னர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க தொடங்கிய இவர், அண்மையில் தான் மற்றொரு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
அதாவது 'விட்டிலிகோ' என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "என்னுடைய நிறத்தை இழந்து கொண்டிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உங்களது அன்பைக் கேட்டுக் கொள்கிறேன்" என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அண்மையில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றி, "எனக்கு புற்றுநோய் வந்தபோது முதலில் எனது நண்பர்களிடம்தான் கூறினேன். அப்போது அவர்கள் எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள்; ஆறுதலாக இருந்தார்கள்.
இருப்பினும் எனக்கு புற்றுநோய் வந்ததை எண்ணி எண்ணி வருத்தப்பட்டேன். இதனால் நான் தனிமையிலேயே இருந்தேன்; இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதிருக்கேன். எப்போதும் கேமரா முன்பு இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். எங்கே நான் செத்துவிடுவேனோ என்று பயந்து பயந்து வாழ்ந்தேன்.
அதனாலே எனது பிரச்னையை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். யாராவது என் உடல் மீது இந்த மச்சங்கள் எப்படி என்று கேட்டால் எனது இன்ஸ்டாவை பாருங்கள் என முகத்தில் அறைந்த மாதிரி கூறிவிடுவேன். ஒரு கட்டத்தில் எனக்கு யாரும் வரவில்லை. இதனாலே நான் தனிமையில் இருந்தேன். எனது வாழ்க்கையில் சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது இன்னொரு புதிய பிரச்னையுடன் போராடிவருகிறேன்.
இப்போது எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருக்கிறது. என் உடலில் வெள்ளை புள்ளிகளை கவனித்தேன். அதன் பிறகு அந்த நோய் முகம், கழுத்து மற்றும் உள்ளங்கைகளுக்கு பரவியது. மாத்திரை சாப்பிட்ட பிறகும், நுரையீரல் பிரச்னையால், மாத்திரைகளை குறைத்தேன். இதனால் உடல் முழுவதும் தழும்புகள் அதிகரித்துள்ளன" என்று வேதனையுடன் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!