Cinema
பவன் கல்யாணை இயக்கும் சமுத்திரக்கனி.. தெலுங்கில் ரீ-மேக் ஆகும் தம்பி ராமையா படம் !
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் சமுத்திரக்கனி. நடிகராக அறியப்படும் முன் இவர் ஒரு திரைப்பட இயக்குநர் அவர். இவரது இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' திரைப்படம் இயக்குநராக இவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்று தந்தது.
நடிகராக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சாட்டை, அப்பா, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
இவரது இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'வினோதய சித்தம்'. இதில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வாழ்க்கையில் பிசினெஸ், நம்பர் 1, பணம் என்று அழைந்து திரியும் தம்பி ராமையா தனது குடும்பத்தை கவனிக்க மறந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழக்கிறார்.
ஆனால் தான் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதாக கூறி, கடவுளிடம் அவகாசம் கேட்டு மீண்டும் உயிர் பிழைத்து என்னெல்லாம் செய்கிறார் என்று கதை நகரும். தமிழில் பெரிய அளவில் இந்த படம் பேசப்படவில்லை என்றாலும், கதை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்யவுள்ளார் சமுத்திரக்கனி. இதன் பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே இருந்து வந்த நிலையில், இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்த கதாபத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜும் நடிக்க உள்ளனர்.
அதோடு பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். இதன்மூலம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் படத்தை இயக்குகிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?