Cinema
அனுமதி இல்லாமல் வளர்க்கப்பட்ட கிளிகள்.. ரோபோ சங்கர் வளர்ந்த கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் !
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான ரோபோ சங்கர் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த ரோபோ சங்கர் தற்போது ரஜினியின் ஜெயிலர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ரோபோ சங்கரின் வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவர் தனது வீட்டில் அலெக்ஸாண்ட்ரியன் வகையை சேர்ந்த 2 கிளிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்த இரண்டு கிளிகளும் அவர்களுக்கு பரிசாக வந்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கிளிகளும் பரிசாக வந்ததால், இந்த கிளிகளுக்கு பிகில், ஏஞ்சல் என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்க அனுமதி கிடையாது என்பதனால் அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த இரண்டு கிளிகளும் தற்போது கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் தற்போது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்றுள்ளதால் அவர் சென்னை திரும்பியதும் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் யூடியூப் சேனல் ஒன்று சமீபத்தில் ரோபோ சங்கரின் வீட்டில் எடுத்த வீடியோ ஒன்றில் இந்த 2 கிளிகளும் இடம்பெற்றது. இதனைப் பார்த்த பின்னர் வனத்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரோபோ சங்கரின் வீட்டுக்கு சென்று அந்த இரண்டு கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?