Cinema
வாழ்வின் இறுதி நேரத்தில் இருக்கும் சிறுவன்.. நேரில் சென்று ராம் சரண் செய்த செயல்.. குவியும் பாராட்டுகள்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் ராம்சரண். தெலுங்கில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர், 2007-ல் வெளியான சிறுதா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன்மூலம் தொடங்கிய தனது திரைப்பயணம் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இவரது இரண்டாவது படமே தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியானது. 'மகதீரா' என்ற பெயர் கொண்ட அந்த படம் ராம் சரணுக்கு மட்டுமின்றி, காஜலுக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது. இந்த படம் தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மூலம், ராம்சரனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் கூடத்தொடங்கியது.
அதன்பிறகு சில ஹிட் படங்கள் கொடுத்தாலும் இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மேலும் கவர்ந்து வந்தார். இவருக்கு மிகப்பெரிய பெயர் கொடுத்த மகதீரா கூட்டணி மீண்டும் இணைந்தது. கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் RRR படமும் ஒன்று. தென்னிந்திய திரை நடிகர்களில் நீங்கா இடம் பிடித்திருந்த ராம் சரண், இந்த படத்தின் மூலம் இந்திய திரை பரிபலங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
தற்போது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் RC 15 படத்தில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானோர் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இவரை காண ஒரு ரசிகர் குடும்பம் சுமார் 231 கி.மீட்டரை தாண்டி நடந்தே இவரை காண வந்தனர். அவர்களை இவரும் ஆரத்தழுவி வரவேற்றார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த ஒரு நாயகனாக இருக்கிறார்.
இந்த நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஒருவனை இவர் நேரில் கண்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஸ்பர்ஷ் ஹாஸ்பைஸ் மருத்துவமனையில் 9 வயது சிறுவன் ரவுல மணி குஷல் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்ட்டுள்ளார்.
இந்த சிறுவனுக்கு ராம்சரணை நேரில் காண வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. அதிலும் RRR படத்தில் ராம்சரண் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் சிறுவனுக்கு மிகவும் பிடிக்கவே ராம்சரணை நேரில் கண்டே ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ராம் சரண் காதுக்கு எட்டவே, உடனே அவரும் தனது நேரத்தை ஒதுக்கி சிறுவனை காண மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சிறுவனுடன் உரையாடினார். மேலும் அவருக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். இவர்களது உரையாடல் முடிந்த பிறகு சிறுவனுக்கு பரிசு ஒன்றையும் வழங்கினார் ராம் சரண்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
உலக அளவில் இதே போல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள் தங்களுக்கு சூப்பர் ஹீரோக்களை நேரில் காண வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறினால், உடனே பல சூப்பர் ஹீரோக்கள் அவர்களை நேரில் காண வருவர்.
குறிப்பாக இதே போல், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், தோர் உள்ளிட்ட பலரும் அதே போல் வேடமணிந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதலும், மகிழ்ச்சியையும் தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு