Cinema

“இனி இவரு தான் ஹீரோ.. PROFESSOR இல்ல” -வெளியானது MONEY HEIST-ன் UPDATE: எப்போது வெளியாகும்? -முழு விவரம்!

கொரோனா லாக்டவுன் காரணமாக நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று ரசிகர்களுக்கு ஓடிடி தளங்களுக்குமான நெருக்கம். முன்பு ஓடிடி தளங்களில் படங்களை மட்டும் பார்த்து வந்தவர்கள், மிக அதிகமாக வெப் சீரிஸ்களை பார்க்க துவங்கியது இந்த லாக்டவுன் காலத்தில்தான். அதற்கு ஏற்றது போல பல வெப் சீரிஸ்களில் புதிய சீசன்கள் வெளியானது.

அப்படி பரபரபப்பாக பேசப்பட்ட சீரிஸ்களில் ஒன்று ஸ்பானிஷில் வெப்சீரிஸான மணி `ஹெய்ஸ்ட்'. முதலில் ஸ்பானிஷ் மொழியிலும், ஆங்கில சப்டைட்டிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது.

Netflix -ல் வெளியான ஸ்பானிஷ் வெப் சீரிஸான Money Heist-க்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தத் தொடரின் முதல் சீசன் 2017ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் Money Heist என்ற தொடர் ஒன்று இருப்பதே கொரோனா காலகட்டத்தில்தான் தெரியும். வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு பெரிய விருந்தாக அமைந்தது.

அதன் பின் இன்னும் புது ஆடியன்ஸ் உள்ளே வந்ததால் இதன் தொடர்ச்சியான பாகங்கள் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இதன் முதல் இரண்டு சீசன்களில், PROFESSOR தலைமையிலான குழு, நாட்டில் இருக்கும் பெரிய வங்கியை முடக்கி, அதில் புதிதாக பணத்தை அச்சடித்து அதை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

அடுத்து வெளியான 3 சீசன்களில், தங்கத்தை கொள்ளையடிக்க சென்று, கொள்ளை நடந்து கொண்டிருந்த போது நிகழும் ஒரு திருப்பத்துடன் முடிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களான பெர்லின், டோக்கியோ, நைரோபி, ஆஸ்லோ, மாஸ்கொ உள்ளிட்டவர்கள் இறந்து போனதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.

இந்த சீரிஸின் 5 சீசன்களும் நிறைவடைந்த நிலையில், அனேகமாக இது மணி ஹெய்ஸ்ட்டின் இறுதி சீசனாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆரம்பத்தில் இருந்த அதே வரவேற்பு இறுதிக்கட்டம் வரை மாறாமல் குறையாமல் இந்த சீரிஸ் இருந்தது. உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த சீரிஸ், பல பேங்க் கொள்ளைகளுக்கு இது முன்மாதிரியாக இருந்தது. எனினும் நிஜ திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கி கொண்டார்கள்.

உலக அளவில் கொண்டாடப்பட்ட இந்த சீரிஸின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இந்த சீரிஸில் ஆரம்பத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமான கதாபாத்திரம்தான் பெர்லின். அப்போது இறந்தாலும், அடுத்தடுத்து பாகங்களில் ஒவ்வொரு எபிசோடுகளிலும் பெர்லின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்தது.

இந்த பேங்க் கொள்ளை திட்டத்தின் மூலக்கூறே பெர்லின்தான். அவர் அந்த சீரிஸில் இறந்தாலும், அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க எண்ணியுள்ளனர் குழுவினர். அதன்படி இந்த சீரிஸின் அடுத்த பாகம் Prequel என்று சொல்லப்படும் ஹெய்ஸ்ட்டுக்கு முன்பு நடக்கும் சம்பவங்கள் பற்றிய கதையை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பெர்லின்' என்ற பெயரில் உருவாக்கும் இந்த தொடருக்கு 8 எபிசோடுகள் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் கொள்ளை கும்பல் ஒன்றாக சேரும் முன்பு அவரது வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இந்த கதை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை NETFLIX தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read: “தயவு செய்து UPDATE கேக்காதீங்க.. அழுத்தமாக இருக்கு..” - ரசிகர்களிடம் கெஞ்சிய ஜூனியர் NTR !