Cinema
“அனைவரையும் திருப்தி படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை” -மைக்கேல் பட விமர்சனத்துக்கு இயக்குநர் பதில்
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கடந்த 3-ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம்தான் மைக்கேல் (Michael). சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா கெளஷிகே, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மைக்கேல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக ‘புரியாத புதிர்’ மற்றும் ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மைக்கேல் திரைப்படம் இவருக்கு மூன்றாவது படமாகும். ரஞ்சித் ஜெயக்கொடியின் மூன்றாவது படம் ’மைக்கேல்’.
முன்னதாக வெளியான படங்கள் காதலை மட்டுமே மையமாக வைத்து, காதலில் நடக்கும் மோதல்கள், மனஸ்தாபங்களும் பேசப்பட்டிருக்கும். குறிப்பாக 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் முழுக்க முழுக்க காதலில் நடக்கும் விஷயங்களை மட்டுமே கூறியிருக்கும். இந்த திரைப்படம் ஹரிஷ் கல்யாணின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள மைக்கேல் திரைப்படம் காதலுக்காக கதாநாயகன் பல்வேறு ரௌடிகளுடன் சண்டையிடுவது போன்றுள்ளது. தொடர்ந்து இந்த படம் இரத்த கோரங்களுடன் காட்சியளிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அதன்படி இந்த படத்திற்கும் அவர்தான் இசையமைத்துள்ளார்.
இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடியின் மூன்றாவது படமான இந்த படத்தை திரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். படத்தின் கதை மற்றும் கதாபத்திரங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் நெட்டிசன்களுக்கு படக்குழுவினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மைக்கேல் படத்தை விமர்சிக்கும் திரை ரசிகர்களுக்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வாயிலாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது எல்லா படைப்புகளையும் போலவே 'மைக்கேல்' திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன்.
அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்.
மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !