Cinema
குடித்துவிட்டு விமானத்தில் பயணம்.. சவுதியில் கைது செய்யப்பட்ட அனுராக் காஷ்யப்.. ரசிகர்கள் அதிர்ச்சி !
பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்தான் அனுராக் காஷ்யப். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், திரைத்துறையில் புரட்சியை கொண்டு வர வேண்டும் என்று மும்பைக்கு வந்தார். தொடர்ந்து தன்னால் முடிந்த வரை ரசிகர்களுக்கு பிடித்தவாறு படங்களை கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து இயக்கத்தில் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பலவை ஹிட் கொடுத்தாலும் சில, விமர்சன ரீதியாக மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் இயக்கத்தில் இருந்தே அப்படியே தயாரிப்பாளராக உருவானார். இவரது வருகை பாலிவுட் சினிமாவில் பல மாற்றங்களை கொடுத்தது.
தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடம் தனது முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பை பெற்றார். சிறந்த வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தமிழில் சுந்தர் சியுடன் 'ஒன் டு ஒன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனுராக் இயக்கத்தில் கடந்த 3-ம் தேதி வெளியான திரைபடம்தான் 'Almost Pyaar with DJ Mohabbat'. இந்தியில் வெளியான இந்த படம் தொடர்பாக அனுராக் தனியார் தொலைக்காட்சி, Youtube போன்றவைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வங்கியில் சமீபத்தில் அவர் அளித்த ஒன்றில் தனக்கு நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது தான் சவூதி அரேபியாவில் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "எரிமலை வெடிப்பு காரணமாக டென்மார்க்கில் இருந்து அந்நேரம் விமானம் எதுவும் இயங்கவில்லை. மிகவும் சோர்வாக இருந்த நான் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்று மது அருந்தினேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு சுமார் 5 மணி நேரம் அங்கு காத்திருந்தேன். பின்னர் விமானம் புறப்பட்டவுடன் என்ன நடந்தது என்ன தெரியாமலேயே போதையில் சவூதி அரேபியாவில் இறங்கியதும் போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.
ஆனால் என்னிடம் அதிர்ஷ்டவசமாக மொபைல் போன் இருந்ததால், அதிலிருந்து இந்திய தொழிலதிபர் ரோனி ஸ்க்ரூவாலாவுக்கு மெசெஜ் அனுப்பினேன். எனக்கு என்ன பயம் என்றால் டென்மார்க்கில் இருந்து வரும் போது பன்றி இறைச்சியை கொண்டு வந்தேன். அதனால் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. மேலும் சவூதியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்லவிருப்பதை கூறி அதிகாரிகள் தன்னை அழைத்துச் செல்ல வந்ததையும் அனுராக் நினைவு கூர்ந்தார்.
அப்போது சவூதி விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. விமான ஊழியர்களும் நான் இல்லாமல் செல்ல மறுத்ததால் கிட்டதட்ட 3 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது" என்றார்.
அனுராக் வெறும் சினிமாவில் மட்டுமல்லாது, அரசியல் கருத்துக்களையும் நேருக்கு நேர் போட்டுடைப்பார். எந்தவித கருத்தாக இருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசக்கூடிய நபர். மேலும் தனக்கு காஷ்மீர் பைல்ஸ் படம் பிடிக்கவில்லை என்றும், அது ஆஸ்கர் நாமினேஷன் வரை கூட செல்லாது என்றும் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!