Cinema
AK 62 படத்தில் இருந்து விலகல்.. ரசிகர்களுக்கு சூசகமாக உணர்த்திய விக்னேஷ் சிவன்.. என்ன விஷயம் தெரியுமா ?
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் துணிவு. எச்.வினோத் இயக்கிய இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 11-ம் தேதி திரையரங்கில் வெளியானது.
விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவு நேருக்கு நேர் மோதிய நிலையில், துணிவு முதல் நாள் வசூல் சுமார் ரூ.23 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் தற்போது வாரிசு படமே வசூல் ரீதியாக முன்னிலையில் உள்ளது.
துணிவு படத்தின் பணியின்போதே அஜித்தின் அடுத்த படமான AK62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
துணிவு படத்தின் நிறைவு பணிகளுக்கு பிறகு AK62 படத்தின் அப்டேட்டின் படி அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திரிஷா அதன்பிறகு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
தொடர்ந்து இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானமும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதிர்ச்சியான அப்டேட் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின் படி, அஜித்தின் அடுத்த படத்தை (AK62), இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், கதை உருவாக தாமதாவதால் இவரது படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் இணையவாசிகள் ட்விட்டர் பக்கத்தில் #AK62 - #JusticeforVigneshShivan என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிடவில்லை. எனினும் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் இயக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பாயோவில் '#AK62' என்பதை நீக்கியுள்ளார். அதற்கு பதில் wikki6 என்று பதிவேற்றியுள்ளார். மேலும் அஜித் புகைப்படம் இருந்த கவர் பிக்கையும் மாற்றியுள்ளார்.
இது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. விக்னேஷ் சிவனுக்கு பதில் இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இயக்குநர் மகிழ் திருமேனி 2010-ல் வெளியான 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு அருண்விஜயின் 'தடையற தாக்க', ஆர்யாவின் 'மீகாமன்', அருண்விஜயின் 'தடம்', அண்மையில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' படங்களை இயக்கியுள்ளார். மகிழ் முதல்முறையாக அஜித்தை வைத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்