Cinema
#AK62 படத்தை இயக்கும் மகிழ் திருமேனி? : இணையத்தில் ட்ரெண்டாகும் #JusticeforVigneshShivan - பின்னணி என்ன?
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் துணிவு. எச்.வினோத் இயக்கிய இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி திரையரங்கில் வெளியானது.
விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவு நேருக்கு நேர் மோதிய நிலையில், துணிவு முதல் நாள் வசூல் சுமார் ரூ.23 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் தற்போது வாரிசு படமே வசூல் ரீதியாக முன்னிலையில் உள்ளது.
துணிவு படத்தின் பணியின்போதே அஜித்தின் அடுத்த படமான AK62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
துணிவு படத்தின் நிறைவு பணிகளுக்கு பிறகு AK62 படத்தின் அப்டேட் படி அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் திரிஷா அதன்பிறகு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், தற்போது இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானமும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை (AK62), இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின்படி, AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், கதை உருவாக தாமதாவதால் இவரது படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் இணையவாசிகள் ட்விட்டர் பக்கத்தில் #AK62 - #JusticeforVigneshShivan என்ற ஹாஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிடவில்லை
இயக்குநர் மகிழ் திருமேனி 2010-ல் வெளியான 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு அருண்விஜயின் 'தடையற தாக்க', ஆர்யாவின் 'மீகாமன்', அருண்விஜயின் 'தடம்', அண்மையில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' படங்களை இயக்கியுள்ளார். மகிழ் முதல்முறையாக அஜித்தை வைத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!