Cinema
கார் மீது கல் வீசி மோசமாக நடந்து கொண்ட தாடி பாலாஜி மனைவி : வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.. பின்னணி ?
தமிழில் காமெடி நடிகர்களில் நீங்கா இடம்பிடித்தவர்தான் தாடி பாலாஜி. நடிகராக மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாகவும் இருக்கிறார். இவருக்கு நித்யா என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து கோரினர்.
தொடர்ந்து அதன்பிறகும் ஒருவரை ஒருவர் வசைபாடியதோடு, ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகாரும் கொடுத்தனர். தொடர்ந்து இவர்களது சர்ச்சை பிக் பாசிலும் வெடித்தது. பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் இருவரும் பங்கேற்றனர். அங்கு சென்றாலாவது ஒன்று சேர்வார்கள் என்று எண்ணிய நிலையில், இவர்களுக்குள் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா, சென்னை , மாதவரம் சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கோபமடைந்த நித்யா நேற்று நள்ளிரவு, எதிர்வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். இதையடுத்து காலை எழுந்து பார்க்கையில் தனது கார் சேதமாகியிருந்தது உரிமையாளருக்கு தெரியவந்தது. பின்னர் அவர் வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நித்யா, நேற்று இரவு கூரிய கல்லை கொண்டு அவரது கார் அருகே சென்றதும், காரில் கீறல் போட்டதும், மேலும் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததும் அதில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நித்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாதவரம் போலிசார், தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுக்கப்பட்டார். இந்த நிகழ்வு தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!