Cinema
நேருக்கு நேர் மோதும் அண்ணன் - தம்பி: ஒரு பக்கம் ‘வாத்தி’.. மறு பக்கம் ‘பகாசூரன்’.. வெல்லப்போவது யார் ?
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் தனுஷ். அதேபோல் முன்னணி இயக்குநராக இருப்பவர்தான் செல்வராகவன். தனுஷின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியது அவரது அண்ணன் செல்வராகவன் தான். விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் படங்களை இயக்கினாலும், தனுஷின் முதுகெழும்பாக தான் இவர் இருந்தார் என்றே கூற முடியும்.
இருப்பினும் இயக்குநராக செல்வராகவன் தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் சில தனுஷ் பல படங்களில் நடித்துள்ளார். இயக்கத்தை தொடர்ந்து செல்வா, நடிப்பதிலும் ஆர்வம் காட்ட தொடங்கினார். அதன்படி 2022-ல் ஓடிடி தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷிற்கு அண்ணனாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து விஜின் நடிப்பில் வளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் ஒரு உயர் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனுஷ் வைத்து 'நானே வருவேன்' படத்தை இயக்கினார். சைக்கோ - திரில்லர், ஹாரர் கலந்த படமான இந்த படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் இல்லை என்றாலும், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாகவே இருந்தது.
இந்த படத்திலும் செல்வா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம்தான் 'பகாசூரன்'. மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நாட்டி (எ) நடராஜன், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்த படத்தின் ட்ரைலர், தற்போது வரை சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அதே தேதியில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் வெங்கி அத்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்ணன் படமும், தம்பி படமும் ஒரே தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இருதரப்பு ரசிகர்களும் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்று பெரும் குழப்பத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!