Cinema
பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம் !
ரெஜினா, நிவேதா தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம்தான் 'சாகினி டாகினி'. இந்த படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் சுதிர் வர்மா. ஆந்திர பிரதேச மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான 'சுவாமி ரா ரா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நிகில் சித்தார்த், ஸ்வாதி ரெட்டி நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தொடர்ந்து இவர் டோச்சே, கேஷவா, ரனரங்கம், என படங்களை இயக்கியதோடு, கிரக் பார்டி என்ற படத்திற்கு எழுத்தாளராகவும் இருந்துள்ளார். மேலும் அண்மையில் ரெஜினா, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான 'சாகினி டாகினி' படத்தை இயக்கியுள்ளார். இதுமட்டுமின்றி 2013-ம் ஆண்டு வெளியான 'செகண்ட் ஹாண்ட்' (Second Hand) என்ற படத்திலும், 2016ல் வெளியான குண்டணாப்பு பொம்மா (Kundanapu Bomma) என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் இவர், விசாகபட்டணத்தில் இருக்கும் தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவை இவருடன் Kundanapu Bomma படத்தில் சேர்ந்து நடித்த சுதாகர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து நடிகர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதீர் வர்மா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து காவல்துறைக்குக் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ராதாகுமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!