Cinema
#FactCheck : “பட்டாக்கத்தியுடன் நடிகர் விஜய்..” - தொடர்ந்து அவதூறு பரப்பும் 'தினமலர்'.. நடந்தது என்ன ?
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடிப்பில் கடந்த 11-ம் தேதி 'வாரிசு' திரைப்படம் வெளியானது. துணிவா.. வாரிசா.. என்று மோதலில் வாரிசுதான் பாக்ஸ் ஆபீஸில் தற்போது வரை முன்னிலையில் உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆனந்தத்தில் இருக்கும் நிலையில், மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி வழங்கியது விஜயின் 67-வது படத்தின் update.
அதோடு வாரிசு படம் தெலுங்கில் 14-ம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இதனால் வாரிசு படத்தின் வெற்றிகொண்டாட்டம் அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் தமிழ் பத்திரிகையான தினமலர் இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் "சென்னையைத் தொடர்ந்து, ஆந்திராவில் நடந்த, ‘வாரிசு’ பட வெற்றி கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார். அங்கு பட்டாக் கத்தியுடன் விஜய் கொடுத்த போஸ், சமூக வலை தளங்களில் வெளியானது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் ஆர்ப்பரித்தனர். அதேநேரம், பட்டாக் கத்தியுடன் உள்ள விஜய்க்கு கண்டனமும் வலுத்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வெற்றி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் நடிகர் விஜய் பட்டாக்கத்தியுடன் இருப்பதுபோல் இல்லை. மாறாக அவர் சக நடிகர்கள், ரசிகர்கள், கேக் வெட்டுவது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் தேடுகையில், இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படத்தை எடிட் செய்து அவர் பட்டாக்கத்தியுடன் இருக்கும்படியாக ரசிகர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் ஹீரோ பட்டகத்தியுடன் இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இவை எதுவும் தெரியாத தினமலர் பத்திரிகை, நடிகர் விஜய் பட்டாகத்தியுடன் இருப்பதாக வதந்தி பரப்பியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து "நிஜ போட்டோவுக்கும், எடிட் செய்த போட்டோவுக்கு வித்தியாசம் தெரியாதா..? ஒழுங்கா மன்னிப்பு கேள்" என்று பதிவிட்டு கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இதற்கு முன்னதாக முதலமைச்சர், அமைச்சர்கள் என பலரை பற்றியும் தினமலர் ஊடகம் அவதூறு பரப்பி கண்டனத்துக்கு உள்ளாகியது. இப்படி இருக்கையில் தற்போது விஜய் குறித்த அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !