Cinema
ஆசிரியர் முன்னிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்த நித்யா மேனன்.. குவியும் பாராட்டு !
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது வரை விடாமல் தொடர்ந்து திரையுலகில் வலம் வருகிறார்.
இவர் தமிழில் விஜயுடன் மெர்சல், துல்கருடன் ஓகே கண்மணி, ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, சூர்யாவுடன் 24, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.
தொடர்ந்து கைவசம் படங்கள் வைத்திருக்கும் நித்யா தற்போது மலையாளத்தில் உருவாகும் 'ஆறம் திருக்கல்பனா' படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் பிசியாக படத்தில் நடித்து வந்தாலும், அடிக்கடி ஆந்திர மாநிலம் திருப்பதியிலுள்ள வரதையா பாளையத்தில் இருக்கும் கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் அண்மையில் அங்கு சென்ற நித்யா, அங்குள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்துக்கு சென்றார். பின்னர் அருகில் இருந்து அரசு தொடக்க பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த வகுப்பு ஒன்றிற்கு சென்ற அவர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து கலகலப்பாக பேசினார். தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். ஆங்கிலத்தில் உள்ள பாடத்தை அவர்களுக்கு புரியும் வகையில் தெலுங்கில் மொழிபெயர்த்து சொல்லிக்கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், "இது என் புத்தாண்டு.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறு குழந்தைகளுடன்.. நான் நிச்சயமாக அவர்களை விட அங்கு இருந்து எடுத்து கொள்ள வேண்டும்.. கிராமங்களில் உள்ள குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி நான் எப்போதும் ஒரு பெரிய நம்பிக்கையை உணர்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!