Cinema
அஜித் - விஜய்யை பின்னுக்கு தள்ளிய பாலையா..! - முதல் நாள் செம்ம வசூல் வேட்டை செய்த வீர சிம்ஹா ரெட்டி !
கடந்த 11-ம் தேதி தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களான அஜித், விஜயின், துணிவு மற்றும் வாரிசு படம் வெளியானது. இந்த படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியானது.
தமிழ்நாட்டில் இந்த பொங்கல் வின்னர் யார் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இப்படங்களின் முதல் நாள் வசூல் விவரம் வெளியானது. அதன்படி அஜித்தின் துணிவு தமிழ்நாடு அளவில் ரூ.2.12 கோடியும், இந்திய அளவில் ரூ.30.16 கோடியும், உலகளவில் ரூ.39.01 கோடியும் வசூலித்துள்ளது.
அதேபோல் விஜயின் வாரிசு, தமிழ்நாடு அளவில் ரூ.19.43 கோடியும், இந்திய அளவில் ரூ.31.47 கோடியும், உலகளவில் ரூ.46.32 கோடியும் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தின் துணிவுதான் வசூல் நாயகனாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' முதல் நாளே 50 கோடியை தாண்டி வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவின் 107-வது படமான வீர சிம்ஹா ரெட்டி கடந்த 12-ம் தேதி வெளியாகியது. உலகம் முழுக்க வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணாவுடன் ஸ்ருதி ஹாசன், வர லட்சுமி, ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கோடி கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள பாலகிருஷ்ணாவின் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழில் வெளியாகிய அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் முதல் நாள் வசூலை பின்னுக்குத் தள்ளி பாலகிருஷ்ணா சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!