Cinema
“Bank Loan.. EMI பிரச்சனையை துணிவாக பேசிய துணிவு” : money heist படமாக இருக்கிறதா?- படத்தின் கதை என்ன?
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் 'துணிவு' படம் இன்று வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வந்த நிலையில், திரையில் இரண்டு தரப்பு ரசிகர்களும் பெரும் கொண்டாட்டமாக படத்தை கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் த 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் நேருக்கு நேர் மோதுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
பின்னர் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது. தொடர்ந்து வாரிசு படம் தனது ஆடியோ லான்ச்சை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. இதில் விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்களை தாக்கி பேனர் ஒன்றை தூக்கி பிடித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வெறுப்பேத்த, உடனே அவர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மற்றொரு பேனரையும் அடித்தனர். வாரிசு இசை வெளியீடு முடிந்த அடுத்த நாளே, துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வெளியானது.
இந்நிலையில் துணிவு படம் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம்...
முதல் காட்சியில் இருந்து படத்தின் கதை தொடங்குறது, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் சமுத்திரக்கனி தனக்கான தனி மேனரிசத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாஸ் காட்சிகள் மூலம் நாயகி மஞ்சு வாரியர் படம் முழுவதும் வருகிறார். அவருக்கான காட்சி திரையில் அப்ளாஸ்களை குவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, மகாநதி சங்கர், பக்ஸ், ஜி.எம்.சுந்தர், பிரேம் குமார் என அனைவருமே தங்களின் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர். மோகன சுந்தரம் தனது சிரிப்பு காட்சிகளை சரியாக கொடுத்திருக்கிறார். முதல்பாதியில் நடிகர் அஜீத்துக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்கும் காட்சிகள் சுவாரஸ்ய த்ரில்லராக மாறியுள்ளது.
மேலும் அஜித்தின் அல்ட்ரா கூல் மோட் காட்சிகளில் பலமாக அமைந்திருக்கிருக்கிறது. அதுமட்டுமல்லாது இரண்டாவது பாதியில் கொள்ளைக்கான காரணம் என்ன? அஜீத் யார் என்பதை எமோஷனலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதுமட்டுமல்லாது மையக் கருவாக கார்ப்பரேட் வங்கி கொள்ளைகளை காட்சி படுத்திய விவகாரம் எளிமையாக இருந்தற்கு இயக்குநருக்கு தனிபாராட்டே கொடுக்கலாம்.
குறிப்பாக மிகப் பெரிய கார்ப்ரேட் நிறுவனம், அவற்றை சார்ந்திருக்கும் வங்கி அதன் கீழ் இயக்கும் சிறிய கார்ப்பரேட் நிறுவனம் என இவற்றில் இடையில் இருக்கும் நிதி ஆதாய கொள்கை உறவை படிநிலை வகையில் சுவாரஸ்யமாக கொடுத்துருக்கிறார் இயக்குநர் வினோத். பங்குச் சந்தை முதலீடுகள், கடன் அட்டை, லோன், இ.எம்.ஐ என இவற்றால் எதிர்கொள்ளும் சிக்கலை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
“இது தமிழ்நாடு” என படத்தில் திரை அரங்கம் அதிர சமுத்திரக்கனி பேசும் வசனும் சமகால பிரச்சனையை பொட்டில் அடித்தது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவில் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் நீரவ் ஷா. படத்தில் பைக் ரேசில் செல்லும் திரைக்கதையும், கேப்டன் கூல் அஜித் குமாரின் நடிப்பும் இனைந்து அவரது ரசிகர்களுக்கு விருந்தை அளித்துள்ளார். எனவே இந்த துணிவு ஒரு ட்ரீட்தான்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!