Cinema
தள்ளிப்போகும் வாரிசுடு ரிலீஸ் : பொங்கல் கொண்டாட்டத்துக்கு எதிர்பார்த்து சோகத்தில் ஆழ்ந்த விஜய் ரசிகர்கள்!
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெய சுதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டியைகை ஒட்டி வரும் 11ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தெலுங்கீழ் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் நாள் மாற்றப்பட்டுள்ளது. படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான தணிக்கை இன்றுதான் நடைபெறுகிறது என்றும் கூறப்பட்ட நிலையில், வாரிசுடு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்