Cinema

“நடிப்பில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறன்..” - புத்த மதம் மாறிய வில்லன் நடிகர் பேச்சால் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் சாய் தீனா. மெயின் வில்லன் நடிகராக இவர் இல்லாமல் இருந்தாலும், வில்லனுக்கு வலது கை என்கிற முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். கடந்த 2004-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் தீனா.

அப்போது இவர் முக்கிய ரோலில் நடித்து மற்ற இயக்குநர்கள் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னும் இவருக்கு நெகட்டிவ் ரோலே கிடைத்துள்ளது. தமிழில் எந்திரன், மாநகரம், தெறி, மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர் என பல முன்னணி படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

திரை நடிப்பில் வில்லனாக அறியப்படும் இவர், தனது நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்று ரசிகர்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சாதிய ஏற்றத்தாழ்வு கோட்பாடுகளுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வந்தார். இவரது பேச்சுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர். கொரோனா தொற்றின்போது கூட நடிகர் தீனா தன்னால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.

படம், சமூக சேவை என்று தன்னை பிசியாக வைத்திருக்கும் தீனா, கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார். இவர் மட்டுமில்லாமல், இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சேர்ந்து பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதி மொழிகள் ஏற்று புத்த மதத்தை தழுவினர். இவர்களுடன் புத்த துறவி ஒருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

திடீரென்று சாய் தீனா புத்த மதத்தை தழுவியது குறித்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன். நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான்.

இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்று சொல்வது தவறான ஒன்று. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஜாதி ஒரு சாக்கடை, குப்பை" என்றார்.

இந்த நிலையில் தற்போது புத்த மதமே தன்னை ஒழுக்கமானவனாக மாற்றியுள்ளதாக சாய் தீனா கூறியுள்ளார். இது குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது,"நான் புத்த மதத்தில் இணைந்ததால் கூடுதல் ஒழுக்கமானவனாக மாறி இருக்கிறேன். நான் இதுவரை சைட் அடித்திருப்பேன், மது & சிகிரெட் குடித்திருப்பேன், இன்னும் பல தவறுகள் செய்திருப்பேன். சினிமாவில் நான் நடிக்க வேண்டாம் என்ற எண்ணமும் இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை காட்சிகள், கத்தி எடுத்து வெட்டும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்றும் நினைத்துள்ளேன். ஏனென்றால் பௌத்தம் எனக்கு நிறைய அழகான விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது. தனிமனிதாக, இன்னொருவரை கொலை செய்யாமல் நீ வாழ வேண்டும் என்றால் பௌத்தம் சிறந்தது" என்றார்.

Also Read: “இது நம்மளோட ஜில்லா..” : 19 மில்லியன்.. NO 1 ட்ரெண்டிங்.. - புது வருடத்தில் கலக்கும் ‘துணிவு’ ட்ரைலர் !