Cinema
“வீடு வாடகை : எடப்பாடி அணியினர் அணுக வேண்டாம்..” - நெல்லையில் துணை நடிகர் வைத்துள்ள போர்டால் பரபர !
பொதுவாக வீடு வாடகை விடும் நபர்கள் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பர். அந்த வகையில், இந்த சமூகம், இந்த மதம், சைவம், குடும்பம், பேச்சுலர் என நிபந்தனைகள் விதித்து வீடு வாடகை விடப்படும், படாது என்று போர்டு எழுதி போடுவர். ஆனால் இங்கு ஒருவரோ "வீடு வாடகை : எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்" என்று குறிப்பிட்டு போர்டு வைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐசக் பாண்டியன். இவர் 'எந்திரன்', 'மாரி' உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ள இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரது வீடு ஏற்கனவே வாடைகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் உள்ள அவரது இரண்டாவது மகனின் வீட்டை வாடகைக்கு விட எண்ணிய இவர், அதற்காக பலகையில் எழுதி போட்டுள்ளார். அந்த பலகையில், “வீடு வாடகைக்கு... குடிகாரர், வட மாநிலத்தவர், எடப்பாடி அ.தி.மு.க-வினர் அணுக வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளது. இவரது இந்த விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து கேளிக்கைக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஏனென்றால் அந்த வரிசையில், அதிமுகவினர் அதுவும் எடப்பாடி அதிமுகவினர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "எனக்கு சமூக அக்கறை இருப்பதன் காரணமாகவே இந்த போர்டை நான் வைத்திருக்கிறேன். குடிதான் இந்த சமூகத்தைச் சீரழிக்கிறது. எனவே குடிகாரர்களுக்கு வீடு கொடுப்பதில்லை என முடிவெடுத்தேன். அதே போல நாள்தோறும் நிறைய வட மாநிலத்தவர் இங்கு வருவதால் நமது கலாச்சாரமும், பண்பாடும் கெட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு வீடு கொடுக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் அப்போதைய ஆட்சியில் மதுவை ஒழிப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. எடப்பாடி அ.தி.மு.க-வினர் தங்களின் ஆட்சிக்காலத்தில் மதுவை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதனால்தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கொடுக்க விரும்பவில்லை” என்று கூறினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!