Cinema
“10 படங்களுக்குள் கங்கனாவுக்கு தேசிய விருது.. ஆனால் எங்களுக்கு..?” - ஒன்றிய அரசை விளாசிய ஜெயசுதா !
தெலுங்கு நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பாண்டியன், தவசி, தோழா, என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவை ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009 - 2014 சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், அங்கிருந்தும் விலகி தற்போது YSR காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.
இருப்பினும் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது பேட்டியும் அளித்து வருகிறார். இந்த நிலையில் ஆஹா ஓடிடி தளத்தில் 'Unstoppable' (அன்ஸ்டாப்பபிள்) என்ற டாக் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது. நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் பல திரைக்கலைஞர்கள் கலந்துகொள்வர். அந்த வகையில் இந்த ஷோவில் தெலுங்கு, தமிழில் பிரபல நடிகையாக விளங்கும் ஜெயசுதா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், தென்னக திரை கலைஞர்களுக்கு ஒன்றிய அரசு முறையான அங்கீகாரம் வழங்கவில்லை என்று கட்டமாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து கங்கனா ரனாவத் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது, பலர் அவருக்கு விருது வழங்குவதை விமர்சித்தனர். ஆளும் பாஜக ஆதரவாளரான நடிகைக்கு விருது வழங்கப்பட்டது.
அவருக்கு அந்த விருது கிடைத்ததில் எனக்குப் பிரச்னையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்களுக்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கே, நாங்கள் பல படங்களில் பணியாற்றிய நிலையில், ஒன்றிய அரசின் அங்கீகாரம் இன்றி இருக்கிறோம்.
உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநராக 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் விஜய நிர்மலா இடம் பிடித்தார்.ஆனால் அவர் கூட இப்படி ஒரு பாராட்டை இந்திய அரசால் பெறவில்லை. ஒன்றிய அரசால் தென்னிந்திய திரையுலகம் அங்கீகரிக்கப்படவில்லை என்று சில சமயங்களில் வருத்தமாக உணர்கிறேன்.
நாம் விருதுகளை மரியாதையுடன் பெற வேண்டும். அதைக் கேட்டு பெறக் கூடாது. நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது, என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை வைத்தேன். அதை நிறைவேற்ற இன்றுவரை முயற்சி செய்து வருகிறேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.
நடிகை ஜெயசுதா 5 நந்தி விருதுகள் மற்றும் 5 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாரா. தற்போது விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?