Cinema
டாணாக்காரன்.. கடைசி விவசாயி.. - இந்தாண்டில் Low பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த தமிழ் படங்கள் பட்டியல் இதோ !
ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.
அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், உலகளவில் 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட ஆசியாவை சேர்ந்த டாப் 100 திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்கள் பட்டியல் இதோ.
=> முதல் நீ முடிவும் நீ :
தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கிஷன் தாஸ், மீதா ரகுநாத் நடித்துள்ளனர். ஜீ 5 நேரடி ஓடிடி தளத்தில் இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது
=> சில நேரங்களில் சில மனிதர்கள் :
அசோக் செல்வன், நாசர், மணிகண்டன் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியான இப்படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் உள்ளது.
=> கடைசி விவசாயி :
விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். தற்போது சோனி liv ஓடிடி தளத்தில் உள்ளது.
=> டாணாக்காரன் :
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
=> பயணிகள் கவனிக்கவும் :
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் விதார்த், மஸூம் சங்கர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் உள்ளது.
=> குதிரைவால் :
கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் வெளியான இப்படத்தை ஷ்யாம் சுந்தர், மனோஜ் ஜாசன் இயக்கியுள்ளனர்.
=> சாணி காயிதம் :
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடி வெளியானது
=> போத்தனூர் தபால் நிலையம் :
பிரவீன் இயக்கத்தில் பிரவீன் அஞ்சலி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது
=> சேத்துமான் :
தமிழ் இயக்கத்தில் மாணிக்கம், அஸ்வின் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான இப்படம் சோனி liv ஓடிடி தளத்தில் உள்ளது.
=> O2 :
நயன்தாரா, பேபி ரித்விக் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படத்தை எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது
=> மாமனிதன் :
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா சுரேந்தர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் உள்ளது.
=> கார்கி :
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் இப்படம் வெளியானது. தற்போது இது சோனி liv ஓடிடி தளத்தில் உள்ளது.
=> நட்சத்திரம் நகர்கிறது :
துஷாரா விஜயன், காளிதாஸ், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது Netflix ஓடிடி தளத்தில் உள்ளது.
=> லவ் டுடே :
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், இவனா, யோகி பாபு, ரவீனா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் திரையரங்கில் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. தற்போது இப்படம் Netflix ஓடிடி தளத்தில் உள்ளது.
=> அனல்மேலே பனித்துளி :
ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான இப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படம் சோனி liv ஓடிடி தளத்தில் உள்ளது.
=> கட்டா குஸ்தி :
இந்த மாதம் (டிசம்பர் ) வெளியான இப்படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லக்ஷ்மி நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்கில் வெளியானது
=> ரத்தசாட்சி :
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'ரத்தசாட்சி'. அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கிய இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
=> விட்னெஸ் :
தீபக் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் சோனி liv ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த படம் மனித கழிவுகளை அகற்றும் மனிதகளை பற்றிய கதையாக புதியதொரு பாணியில் உருவாகியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?