Cinema
“Oscar விருது TO ரஜினி வரை” விஜயின் KUTTY STORY காப்பி அடிக்கப்பட்டதா? -இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கும் இவர் நடிப்பில் வரும் பொங்கலின்போது வெளியாகவுள்ள திரைப்படம்தான் 'வாரிசு'.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.
இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரைஸ்கர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் விஜய் மற்றும் பாடகி மானசி குரலில் வெளியான 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
அந்த பாடலும் 'மொச்சை கொட்ட பல்லழகி..' என்ற பாடலின் காப்பி என்று நெட்டிசன்களால் கிண்டல் அடிக்கப்பட்டது. இருப்பினும் அதனையும் கண்டுகொள்ளாத படக்குழு, தனது அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்தினர்.
இதையடுத்து வாரிசின் இரண்டாம் பாடலான சிம்பு பாடிய 'தீ..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு வாரிசின் மூன்றாம் பாடலான 'Soul Of Varisu - அம்மா' பாடல் வெளியாகியது.
பாடலாசிரியர் விவேக் எழுதி, பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தற்போது 8.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று வாரிசின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த விழாவிற்கு மூலை முடுக்கில் இருந்தும் விஜய் ரசிகர்கள் படையெடுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி., தாய் ஷோபனா, வாரிசு படக்குழு என அனைவரும் பங்கேற்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் குட்டி ஸ்டோரியை கேட்க ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இரண்டு குட்டி ஸ்டோரிகள் சொன்னார் விஜய்.
முதல் ஸ்டோரி :
“ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருந்தார்கள். தந்தை தனது குழந்தைகளுக்காக தினமும் சாக்லேட் வாங்கி வருவார். தங்கை தன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார், அண்ணன் தன்னுடைய சாக்லேட்டை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம் என ஒரு இடத்தில் வைப்பார். ஆனால் இந்த தங்கை அதையும் எடுத்து சாப்பிட்டு விடுவார். இது தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் தங்கை தன்னுடைய அண்ணனிடம், 'அன்பு' என்றால் என்ன ? என்று கேட்டார். அதற்கு அந்த அண்ணன், நீ தினமும் உன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டு விடுவாய். என்னுடையதும் எடுத்து சாப்பிடுவாய், நீ சாப்பிட்டுவிடுவாய் என்று தெரிந்தும் நான் அங்கு வைப்பேன். அதுக்கு பெயர்தான் அன்பு என்று கூறினார். அன்பு தான் உலகத்தை ஜெயிக்கக் கூடியது.” என்று கூறி தனது முதல் கதையை முடித்தார்.
இரண்டாம் கதை :
"1990 -களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். கொஞ்ச நாளிலே அவர் எனக்கு சீரியரஸான போட்டியாளராக மாறினார். அவரது தொடர் வெற்றியால் நானும் வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். அவரைவிட அதிகமாக ஜெயிக்கணும் என்று நினைத்தேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை. நான் போட்டிபோட்டு அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்.. உங்ககூட நீங்க போட்டிபோடுங்க.
தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். Compete with Yourself ; Be your own competition!" என்றார். இவரது இந்த குட்டி ஸ்டோரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ஆரவாரத்துடன் கத்தி கூச்சலிட்டனர்.
இந்த நிலையில், 'Be your own competition' என்ற குட்டி ஸ்டோரி தற்போது இணையத்தில் காப்பி அடித்து நடிகர் விஜய் கூறியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதன்படி கடந்த சில ஆண்டிகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ இது போன்றொரு பேச்சை ரசிகர்களுக்கு வழங்கினார்.
அன்று மேடையில் பேசிய அவர், "எனக்கு 15 வயது இருக்கும்பொழுது, என்னிடம் 'உன் ஹீரோ யாரு?' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நான் யோசித்து சொல்லவேண்டும் என்று கூறினேன். பின்னர் 2 வாரம் கழித்து மறுபடியும் அந்த நபர் வந்து கேட்டார். அப்போது, 'அதை பற்றி நான் யோசித்து பின்னர், அது வேறு யாரும் இல்லை 'நான்தான்.. ஆனால் 10 வருஷம் தள்ளி இருக்கேன்' என்று சொன்னேன். பத்து வருஷம் கழிச்சு என் 25 வது வயசுல அந்த நபர் வந்து கேட்டப்போ, 'ரொம்ப பக்கத்துல இல்ல. என் ஹீரோ இப்போ 35 வயசுல இருக்கான்' என்று சொன்னேன்" என்றார்.
இவரது இந்த பேச்சை அவருக்கு ஏற்றார்போல் மாற்றி தற்போது மேடையில் பேசியுள்ளார் என்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படம் வெற்றி வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டும் இதேபோல் ஒரு உரையை ஆற்றினார்.
அப்போது ரஜினி பேசுகையில், "எனக்கு எதிரியும் நான்தான். நண்பனும் நான்தான். என்னுடைய படம்தான் எனக்கு எதிரி. என்னுடைய படம்தான் எனக்கு தீர்வு. என் படத்துக்குதான் நான் போட்டியாக இருக்கேன். மத்தவங்க படத்துக்கு இல்ல. இப்போ எனக்கு போட்டியாக இருப்பது படையப்பா. அடுத்து அந்த படத்தை விட பெரிய ஹிட் கொடுக்கணும்." என்றார்.
இந்த இரண்டு நிகழ்வுகள் தொடர்பான வீடியோவையும் இணையத்தில் பதிவிட்ட நெட்டிசன்கள் நடிகர் விஜய் இதை பார்த்து திருத்து காப்பி அடித்துதான் தனது குட்டி ஸ்டோரியை கூறியதாக பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!