Cinema
“சின்ன கல்லு பெத்த லாபம்..” -பஞ்சதந்திரம் நடிகர் கைகலா சத்யநாராயணா திடீர் மறைவு: திரையுலகம் அஞ்சலி !
பிரபல தெலுங்கு நடிகரான ஸ்ரீ கைகலா சத்யநாராயணா, கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு கொடுத்த அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'பஞ்சதந்திரம்' படத்தில் அறிமுகமானார். அதில் வரும் தெலுங்கு அப்பா கதாபாத்திரம் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் “சின்ன கல்லு பெத்த லாபம்..” என்ற வசனத்தின் மூலம் இப்போது வரை தமிழ் திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான 'தந்தை பெரியாரின்' வரலாற்று படத்தில் 'வேங்கடப்பா நாயக்கர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார். இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'மஹர்ஷி' என்ற படத்தில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்தார்.
மேலும் தற்போது 'தீர்காய்ஷ்மான்பவ' என்ற படத்தில் நடித்து வரும் இவருக்கு, சமீப காலமாக வயது (87) முதிர்வின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் பகுதியில் அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முக்கிய பிரபலன்களான நானி, ராம் சரண் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?