Cinema
Beast படத்தை தொடர்ந்து வாரிசு.. விஜய் படத்தை 4 மாவட்டங்களில் வெளியிடும் Red Giant - அறிவிப்பு உண்மையா ?
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.
இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான சிம்பு பாடிய 'தீ..' பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படமும், விஜயின் வாரிசும் நேரடியாக போட்டியிடவுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் - அஜித் படம் நேரடியாக களமிறங்குவதால் தமிழ் திரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் துணிவு படத்திற்கான திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயிண்ட்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது வாரிசு படத்திற்கான திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் வாரிசு உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் 5 இடங்களில் வெளியிடவுள்ளது. வாரிசு உரிமை ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் விநியோக ஏரியாக்களில் உரிமையை பெற முன்னணி விநியோகத்தர்கள் போட்டி போட்டனர். தற்போது எந்தெந்த பகுதிகளில் யார் யார் வெளியிடவுள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில்,
>> சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு, கோயமுத்தூர் - ரெட் ஜெயிண்ட் நிறுவனம் (உதயநிதி ஸ்டாலின்)
>> திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிக்கான உரிமையை ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் (முத்துக்கனி)
>> மதுரை - 5 ஸ்டார் பிலிம்ஸ்
>> திருச்சி, தஞ்சை - ராது இன்போடெயின்மென்ட் (வி.எஸ்.பாலமுரளி)
>> சேலம் - செந்தில்
இதனை வாரிசு தமிழகத்தின் வெளியிட்டு உரிமையை பெற்ற லலித் குமார், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் விநியோக உரிமையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !