Cinema
RRR முதல் PS 1 வரை.. IMDB-ல் கெத்து காட்டும் தென்னிந்திய சினிமா.. TOP 10 படங்கள் : ரசிகர்கள் உற்சாகம் !
ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் உள்ளிட்ட திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.
அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டிற்கான இந்திய அளவில் மிகவும் பிரபலமான படங்களின் பட்டியலை IMDb நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'RRR' திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
IMDb வெளியிட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள் பட்டியல் இதோ :-
1. RRR (தெலுங்கு)
தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது. 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என அவரே அறிவித்துள்ளார்.
2. தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி)
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, அனுப்பம் கேர், தர்ஷன் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரூ.340.92 வசூலித்துள்ளது. இப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பெரிய சர்ச்சைக்குரிய படம் என்று பெயர் வாங்கியுள்ளது.
3. KGF - 2 (கன்னடம்)
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியான இப்படம் ஒரு ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 1250 கோடி வரை வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் கொடுத்துள்ளது.
4. விக்ரம் (தமிழ்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.420-500 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் ஓடிடி உரிமையை 'Disney+' கைப்பற்றியுள்ளது. மார்வெல் யுனிவர்ஸ் போல், லோகேஷ் யுனிவர்ஸ் என்ற புதிய கோணத்தில் விக்ரம் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கைதி 2 அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.
5. காந்தாரா (கன்னடம்)
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் வெறும் 16 கோடியிலேயே எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் ஹிட் அடித்து 400.90 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. தமிழில் பெரிய அளவில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், மக்களால் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் இதுவும் ஒன்று.
6. ராக்கெட்ரி - நம்பி விளைவு (பான் இந்தியா)
மாதவன் இயக்கி நடித்த இப்படம் சுமார் 50 கோடி வரை வசூலித்துள்ளது. சில சர்ச்சைகளை கிளம்பினாலும் விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை 'Amazon Prime Video' கைப்பற்றியுள்ளது.
7. மேஜர் (இந்தி)
சசி கிரண் திக்கா இயக்கத்தில் ஆதிவி சேஷ், சாயி மஞ்சரேக்கர், ஷோபிதா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. சுமார் 32 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் சுமார் 64−66 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.
8. சீதா ராமம் (தெலுங்கு)
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியானது. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதால் 91.4 வரை வசூல் சாதனையும் படைத்துள்ளது. இந்தி நடிகையான மிருனள் தாகூருக்கு இந்த படம் தென்னிந்தியாவில் ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது.
9. பொன்னியின் செல்வன் 1 (தமிழ்)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் என திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படம் கடந்த செப்டெம்பர் மாதம் உலக அளவில் வெளியானது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு (2023) வெளியாகவுள்ளது.
10. 777 சார்லி (கன்னடம்)
கிரண் ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான இப்படம் நாய் குட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். நாய் பிரியர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்தை பார்த்தவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வாராமல் இருக்காது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 105 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!